கேரள தங்க கடத்தல் வழக்கு: ஸ்வப்னாவின் ஜாமீன் மனு விசாரணை தள்ளிவைப்பு…!!

Author: Aarthi
9 October 2020, 1:59 pm
kerala gold case -updatenews360
Quick Share

கேரள தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஸ்வப்னா சுரேசின் ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் 13ம் தேதிக்கு தள்ளிவைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரசு அமீரகத்தில் இருந்து கேரளாவின் மணப்பாடில் உள்ள அந்நாட்டு தூதரக முகவரிக்கு வந்த பெட்டியில், 30 கிலோ தங்கம் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது தெரிய வந்தது. அவற்றை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் கடத்தலுக்கு பின்னணியில் தூதரகத்தில் ஏற்கனவே பணியாற்றிய ஸ்வப்னா சுரே‌‌ஷ் செயல்பட்டுள்ளார் என்பது தெரியவந்தது. இதனையடுத்து பெங்களூருவில் வைத்து என்.ஐ.ஏ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

ஸ்வப்னாவிடம் மேற்கொண்ட விசாரணையில் இதுவரை ரூ.100 கோடி தங்கம் கடத்தப்பட்டு இருக்க கூடும் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

இந்த வழக்கில் 20க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு, ஸ்வப்னா சுரேஷ், திரிச்சூர் மாவட்டத்தின் விய்யூரில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

இந்த வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஜாமீன் மனு மீது நடைபெறும் விசாரணையை கேரள கொச்சி நீதிமன்றம் வரும் 13ந்தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டு உள்ளது.

Views: - 40

0

0