கேரளாவின் ஆளுநர் ஆரீப் முகம்மது கானுக்கு கொரோனா உறுதி

7 November 2020, 7:03 pm
Quick Share

கேரள ஆளுநர் ஆரீப் முகம்மது கானுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. ஆளுநர் ஆரீப் முகம்மது கான் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தனக்கு இன்று கொரோனா உறுதியாகியிருப்பதாகவும், ஆதலால் தம்முடன் தொடர்பிலிருந்த அனைவரையும் கொரோனா பரிசோதனை எடுத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

கேரளாவில் 83,324 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெறும் நிலையில், 3,88,504 பேர் இதுவரை குணமாகியுள்ளனர். மேலும், 1,640 பேர் கொரோனாவிற்கு பலியாகியது குறிப்பிடத்தக்கது.

Views: - 16

0

0