குறைந்தபட்சம் 85% பேருக்கு தடுப்பூசி போட்டால் மட்டுமே 3வது அலையை சமாளிக்க முடியும் : சுகாதாரத்துறை

2 July 2021, 2:20 pm
veena george - - updatenews360
Quick Share

திருவனந்தபுரம் : கொரோனா 3வது அலையை சமாளிக்க குறைந்தபட்சம் 85% மக்களுக்காவது தடுப்பூசியை போட்டிருக்க வேண்டும் என்று கேரள சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலையின் தாக்கம் மெல்ல மெல்ல கட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது. முன்பை விட அனைத்து மாநிலங்களிலும் கொரோனா தொற்று கட்டுக்குள் இருந்து வருகிறது. ஆனால், மகாராஷ்டிரா, கேரளா மாநிலங்களில் சற்று தொற்று பரவல் அதிகமாகவே காணப்படுகிறது.

இந்த நிலையில், கேரளாவில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தொற்று பரவல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் செய்தியாளர்களிடம் பேசினார்.

அவர் பேசியதாவது :- கேரளாவில் கொரோனா பரிசோதனை அதிகளவில் நடந்து வருவதால், பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனாவால் உயிரிழப்பவர்களின் தகவல்களை 24 மணிநேரத்தில் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. கேரளாவில் இறப்பு விகிதம் 0.4 %மாக உள்ளது.

கொரோனா தொற்றின் 3வது அலையை சமாளிக்க குறைந்தபட்சம் 85% மக்களுக்கு தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தற்போது 7 லட்சம் தடுப்பூசிகள் மட்டுமே கையில் உள்ளன, எனக் கூறினார்.

Views: - 175

0

0