வரி ஏய்ப்பு புகார்..! கிறிஸ்துவ பாதிரியார் வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை ரெய்டு..!

5 November 2020, 4:38 pm
kp_yohannan_updatenews360
Quick Share

கோஸ்பெல் பார் ஆசியா அமைப்பின் நிறுவனர் மற்றும் இயக்குநரும், பிலீவர்ஸ் சர்ச்சின் பெருநகர பிஷப்புமான கே.பி. யோஹன்னனின் குடியிருப்பு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித் துறை இன்று சோதனை மேற்கொண்டுள்ளது. வரி ஏய்ப்பு தொடர்பாக கேரளாவின் கோட்டயம் மற்றும் பத்தனம்திட்டாவில் பல்வேறு இடங்களில் இந்த சோதனைகள் நடத்தப்பட்டன.

இது தொடர்பாக வெளியான அறிக்கையின்படி, வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தின் அடியிலிருந்து ரூ 54 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாகக் கூறப்படுகிறது. மேலும் சில தொலைபேசிகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். காலை 7 மணிக்கு தொடங்கிய சோதனைகள் இன்னும் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

திருவல்லாவை தளமாகக் கொண்ட திருச்சபையின் வரி ஏய்ப்பு மற்றும் அந்நிய செலாவணி மேலாண்மை சட்ட (பெமா) மீறல்கள் தொடர்பான தகவல்கள் கிடைத்ததை அடுத்து சோதனைகள் தொடங்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருவல்லாவில் இவரின் அமைப்பு நடத்தும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் வருமான வரி குழு சோதனை செய்து வருகிறது.

2017’ஆம் ஆண்டில், உள்துறை அமைச்சகம் பிலீவர்ஸ் சர்ச் மற்றும் அதனுடன் தொடர்புடைய மூன்று தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வெளிநாட்டு நிதியை பெற தடை விதித்தது. 18 வருட காலப்பகுதியில் சர்ச் ரூ 1,000 கோடிக்கு மேல் வெளிநாட்டு நிதியைப் பெற்ற நிலையில், அந்த நிதிக்கு முறையான கணக்குகள் எதுவும் காட்டவில்லை எனக் கூறப்பட்டது.

கோஸ்பெல் பார் ஆசியா என்பது ஒரு கிறிஸ்தவ மிஷன் அமைப்பாகும். இது கிறிஸ்துவின் அன்பின் மூலம் சமூகங்கள் கிறிஸ்துவ மதம் மாற்றப்படுவதைக் காண உறுதிபூண்டுள்ளன. பிலீவர்ஸ் சர்ச் என்பது தெற்காசியாவில் ஒரு தேவாலய அமைப்பாகும்.

Views: - 38

0

0