‘ராஜமலா நிலச்சரிவில் சிக்கிய 2 வயது குழந்தையை மீட்க உதவிய நாய்’ – நெகிழ்ச்சி சம்பவம்..!
15 August 2020, 5:12 pmகேரளா மாநிலம் ராஜமலாவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஏராளமான வீடுகள் அடியோடு மண்ணில் புதைந்தது, பல உயிர்கள் மண்ணுக்கு இரையாகின.
இந்த சூழலில், மண்ணின் அடியில் சிக்கியவர்களை கடந்த 8 நாட்களாக பேரிடம் மற்றும் தீயணைப்புத்துறை வீரர்கள், காவலர்கள் என ஏராளமானோர் தேடி வருகின்றனர்.
அங்கு, மனிதர்களை விட வீட்டில் வளர்க்கப்பட்டு வந்த செல்ல பிராணிகள் தங்கள் எஜமானர்களை தேடி அலையும் காட்சிகள் நாளுக்கு நாள் வந்த வண்ணம் உள்ளன.
அந்த வகையில், அங்குள்ள ஆற்றங்கரையோரம் கிடந்த மரத்தின் அருகே நாய் ஒன்று எதையோ இழுக்க போராடிக்கொண்டு இருந்துள்ளது.
இதை பார்த்த அதிகாரிகள் அருகில் சென்று பார்த்தபோது, 2 வயது மதிக்கத்தக்க குழந்தை ஒன்று மரத்தில் சிக்கி கிடப்பது தெரிய வந்தது. உடனடியாக குழந்தையை பத்திரமாக மீட்ட அதிகாரிகள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் தான் தெரிய வந்தது, அந்த குழந்தையின் பெற்றோர் வளர்த்து வந்த குவி என்ற பெயர் உடைய நாய் அது என்று. குழந்தையின் பெற்றோர் இருவரும் உயிரிழந்த நிலையில், அவர்களின் 54 வயதான பாட்டி மட்டும் உயிருடன் உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
எஜமானரை தேடி அலைந்த நாய், அவர்களின் குழந்தையை மீட்க உதவிய நெகிழ்ச்சி சம்பவம் அனைவரையும் மனம் உருகச்செய்துள்ளது.
0
0