கேரள நிலச்சரிவில் எஜமானரை தேடி வந்த நாய் “குவி” – மோப்ப நாய் படைபிரிவில் சேர்க்க திட்டம்..?

21 August 2020, 10:40 am
Quick Share

மூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தனது எஜமானரை தேடி வந்த நாய் குவியினை மோப்ப நாய் பயிற்சியாளர் தத்தெடுத்து வளர்க்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

கேரள மாநிலம் இடுக்கி, மூணாறு இடையே அமைந்துள்ள ராஜமலை பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கனமழையின் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் ஏராளமான குடியிருப்புகள் மண்ணின் அடியில் புதைந்தது.

63 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சூழலில் அங்கு சீரமைப்பு பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதில் மீட்ப்பு படை அதிகாரிகள், காவலர்கள், தீயணைப்பு துறை வீரர்கள் என பலரும் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களுக்கு நாடுவே நாய் ஒன்று தனது எஜமானரை தேடி அலைந்தது. இதனை தொடர்ந்து எஜமானரின் இரண்டரை வயது குழந்தையின் சடலத்தையும் அந்த நாய் கண்டுபிடித்தது. இதனால், அனைவரது கவனத்தையும் ஈர்த்த அந்த நாய் குறித்து விசாரிக்கப்பட்டத்தில் அதன் பெயர் குவி என தெரிய வந்தது.

இந்த நிலையில், குவியின் செயல்களை பார்த்து வியந்துபோன கேரள மாநில மோப்ப நாய் பயிற்சியாளர் அஜித், குவிக்கு உணவு வாங்கி கொடுத்து அதனோடு ஒட்டி உறவாடி வருகிறார். இதனை தொடர்ந்து குவியை தத்தெடுத்து வளர்க்க ஆசைப்பட்ட அஜித், கேரள வன விலங்கு வாரியம் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் கோரிக்கை முன்வைத்தார்.

தற்போது குவியை வளர்க்க அவருக்கு அனுமதி வளங்கப்பட்டுள்ளது. மட்டும் இன்றி குவியை மோப்ப நாய் படைப்பிரிவில் சேர்க்கவும் அனுமதி கோரியுள்ளார் அஜித்.

Views: - 24

0

0