‘ 5 நாட்களாக எஜமானரை தேடி அலையும் பாசக்கார நாய்’ – கேரளாவில் நடைபெற்ற நெகிழ்ச்சி சம்பவம்

12 August 2020, 4:37 pm
Quick Share

ராஜமலை நிலச்சரிவில் சிக்கிய தனது எஜமானரின் குடும்பத்தினரை நாய் ஒன்று தேடி அலையும் காட்சி கண்கலங்க வைத்துள்ளது.

கேரள மாநிலம் இடுக்கு, மூணாறு இடையே அமைந்துள்ள ராஜமலை பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கனமழையின் காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது.

இதில் ஏராளமான குடியிருப்புகள் மண்ணின் அடியில் புதைந்தது. 55 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும், அங்கு சீரமைப்பு பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடந்து வரும் நிலையில் மீட்பு படையினருக்கு இடையே நாய் ஒன்று தனது எஜமானரின் குடும்பத்தை தேடி அலைகிறது.

இந்த காட்சி அங்குள்ளவர்களின் கண்களை குளமாக்கியது. நன்றியுடன் இருபதற்கு நாயை விட சிறந்த உதாரணமாக எந்த உயிரையும் சொல்லி விட முடியாது என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்.