போட்டோஷுட்டுக்காக அழைத்துச் செல்லப்பட்ட மாடல் : 3 நாட்கள் வைத்து கதற, கதற… கொச்சியில் அதிர்ச்சி சம்பவம்

Author: Babu Lakshmanan
6 December 2021, 8:17 pm
photoshoot -updatenews360
Quick Share

கேரளா : போட்டோஷுட் எடுப்பதாக அழைத்துச் சென்று மாடல் அழகியை 3 நாட்கள் வைத்து பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் கேரளாவையே அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இந்தியாவில் பெண்களுக்கு மாடல்துறையிலான நாட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை சாதகமாக பயன்படுத்தும் சில விஷமிகள், அவர்களை சீரழிக்கும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இந்த நிலையில், கேரள மாநிலம் கொச்சியில் போட்டோஷுட் எடுப்பதாக அழைத்துச் சென்று மாடல் அழகியை 3 நாட்கள் வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விளம்பரம் ஒன்றிற்கு முன்னதாக ப்ரீ போட்டோஷுட் எடுக்க வேண்டும் என்று சொல்லி, மாடல் அழகி ஒருவரை ஆலப்புழாவைச் சேர்ந்த சலீம் என்பவர் அழைத்துள்ளார். அவரது பேச்சை நம்பி, அந்த மாடல் அழகியும் கொச்சியின் இடத்திரா பகுதியில் உள்ள லாட்ஜுக்கு சென்றுள்ளார். அங்கு ஜுஸில் மயக்க மருந்து கலந்து கொடுத்ததால் மயங்கி விழுந்த மாடல் அழகியை 3 நாட்கள் மயக்கத்திலேயே வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

பின்னர், அவர்களின் ஆசை முடிந்தவுடன் மாடல் அழகியை வெளியே அனுப்பியுள்ளனர். பாதிக்கப்பட்ட அந்த பெண், கொச்சி போலீசில் அளித்த புகாரின் பேரில் சலீமை கைது செய்துள்ளனர். மேலும், ஷமீர், அஜ்மல் மற்றும் லாட்ஜ் உரிமையாளர் ஒருவரையும் தேடி வருவதாக கூறப்படுகிறது.

முன்பின் தெரியாதவர்கள் போட்டோஷுட் மற்றும் பிற காரணங்களுக்காக அழைத்தால், தன்னை மாடலாக நினைக்கும் பெண்கள், தக்க பாதுகாப்புடனேயே செல்ல வேண்டும் என்பதற்கு இந்த சம்பவம் உதாரணமாக அமைந்துள்ளது.

Views: - 263

0

0