“Couple Meet App Kerala” மனைவிகளை மாற்றிக்கொள்ளும் வினோத விளையாட்டு.. 2000 பேர் குழுவில் இருப்பதாக அதிர்ச்சி தகவல்…

Author: Mari
10 January 2022, 7:42 pm
Quick Share

கேரளாவில், சமூக வலைதளத்தில் ஒரு குழு தொடங்கி, அதன்மூலம் தங்கள் மனைவிகளை மாற்றி கொண்டு, உல்லாசம் அனுபவித்த சம்பவம், தற்போது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது உள்ள காலக்கட்டத்தில், கற்பு, மானம், பெண்மை, என்பது போன்ற நெறிமுறை வார்த்தைகள் காணாமல் போய் கொண்டிருக்கிறது. கடந்த ஆண்டு, சென்னை ஈ.சி.ஆர் சாலையில் உள்ள நட்சத்திர விடுதியில், வசதிபடைத்த ஜோடிகள் ஓர் இடத்தில் கூடி, தங்களது கார் சாவிகளை குலுக்கல் செய்து, கையில் சிக்கும் கார் சாவியைக்கொண்டு மனைவிகளை மாற்றிக்கொள்ளும் விபரீத விளையாட்டுகள் நடைபெற்றன. இது குறித்து, எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
திருமண பந்தத்தை விட்டு தனிமையில் வசிக்கும் ஆண், பெண்களையே பெரும்பாலும் இது போன்ற நடந்து கொண்டனர் என்ற தகவலும் வெளியாகியது.

இது ‘ஜெஸ்ட் டைம்பாஸ்’ என்று ஒரு தரப்பினர் கூறி ஆதரவும் தெரிவித்த கேவலமான சம்பவங்களும் நடந்த நிலையில், இது கலாச்சார சீரழிவு என சமூக ஆர்வலர்கள் விமர்சித்தனர்.
இந்த நிலையில், தற்போது, கேரளாவில், வாட்ஸ் அப் மூலம் “Couple Meet App Kerala”என்ற பெயரில் குழு ஏற்படுத்தி, அதில் மனைவிகளை விற்று சம்பாதித்த 7 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் சங்கனாச்சேரி நகரில், தன் கணவர் கடந்த 2 வருடங்களாக, மற்ற நபர்களுடன் உறவு வைத்துக் கொண்டு பணம் வாங்கி வா துன்புறுத்தியுள்ளார் என்று காவல் நிலையத்தில் ஒரு பெண் புகார் அளித்தார். இதனையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சிகரமான செய்திகள் வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சமூக வலைத்தளங்களில் குடும்ப விழா என்ற பெயரில் குரூப் தொடங்கி செயல்பட்டு வருவதாகவும், இந்த குரூப்பில் தற்போது 2000 பேர் இருப்பதாக தெரிவித்துள்ளான்.

வாரத்தில் 3 நாட்கள் ஏதாவது ஒரு நண்பர் வீட்டில், அந்த குரூப்பில் இருப்பவர்கள் ஏராளமானோர் ஒன்று கூடி, மது, உணவு விருந்து ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் அப்போது, அங்குள்ளவர்கள் தங்களது மனைவிகளை மாற்றி உறவு வைத்துக் கொள்வார்கள் எனவும் தெரிவித்துள்ளான். இது மாதிரியான நிகழ்ச்சிகள் ஓட்டல், லாட்ஜ் போன்ற இடங்களில் நடந்தால் மற்றவர்களுக்கும் போலீசாருக்கும் சந்தேகம் ஏற்படும் என்பதால் குறிப்பிட்ட நண்பர்களுடைய வீட்டை தேர்ந்தெடுப்பது வழக்கமhக கொண்டிருந்துள்ளனர். இதன் மூலம் லட்சக்கணக்கான பணபுழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த தகவலை கேட்டு, அதிர்ச்சியடைந்த போலீசார் அவனின் செல்போனை வாங்கி பரிசோதனை செய்தபோது, அதில் 2 ஆயிரத்துக்கும் மேல் உறுப்பினர்கள் இருப்பதும், அதில், சுமார் 1,000 ஆண்கள் தங்கள் மனைவிகளை உடலுறவுக்காக மாற்றிக் கொள்ள தயாராக உள்ளனர் என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குரூப்பில் சில அரசு உயரதிகாரிகளும், தனியார் துறையை சேர்ந்த உயர் அதிகாரிகளும், பணம் படைத்தவர்களே இந்த குழுவில் இருக்க வாய்ப்பு உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

மேலும், அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், இதுவரை 7 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ‘வெளிநாடுகள், மேலை நாட்டு கலாச்சாரத்தில் இதுபோன்ற மனைவிகளை மாற்றும் சம்பவங்கள் நடந்திருக்கின்றன. இப்போது இந்த பழக்கம் இந்தியாவிலும் பரவி வருவது அதிர்ச்சியை அளிக்கிறது. இதில், ஈடுபடுவோர் ஒருத்தரையும் விடாமல் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், சோஷியல் மீடியாவில் இப்படி க்ரூப்கள் வைத்து மனைவிகளையும், இளம்பெண்களையும் மாற்றி உல்லாசம் அனுபவிக்கும் கும்பல் பற்றிய தகவல்களையும் தொடர்ந்து திரட்டி வருவதாகவும், அவர்களையும் விரைவில் கைது செய்வோம்’ போலீசார் கூறியுள்ளனர். மேலும், சென்னை, பெங்களுரூ போன்ற முக்கிய நகரங்களில் பணக்காரர்களில் சிலர் இப்படி ஈடுபடுவதாக தற்போது பகீரங்க தகவல்கள் வெளியாகியுள்ளது அதிர்ச்சியடைச் செய்துள்ளது.


Views: - 516

0

0