பினராயி விஜயன் பதவிக்கு வேட்டு..? வீட்டு வசதித் திட்டத்திலும் ஊழல்..! ஸ்வப்னா சுரேஷின் தொடர்பு அம்பலம்..!

19 August 2020, 5:33 pm
pinarayi_vijayan_UpdateNews360
Quick Share

ஏற்கனவே சர்ச்சைக்குரிய தங்கக் கடத்தல் மோசடியில் கேரள அரசு சிக்கலில் உள்ள நிலையில், முதலமைச்சர் பினராயி விஜயன் இன்று மற்றொரு அதிர்ச்சியளிக்கும் சம்பவமாக, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள ஒரு தொண்டு நிறுவனத்திற்கும், பினராயி விஜயன் அரசாங்கத்தின் முதன்மை திட்டமான லைஃப் மிஷனுக்கும் இடையிலான ஒப்பந்தம் ஊடகங்களில் வெளிவந்தது.

தங்கக் கடத்தல் மோசடியில், பிரதான குற்றம் சாட்டப்பட்டவர் ஸ்வப்னா சுரேஷ், இந்த திட்டத்தில், ஐக்கிய அரபு அமீரகத்தை தளமாகக் கொண்ட ரெட் கிரசண்ட் அமைப்பின் பங்களிப்பை உறுதி செய்வதற்காக அவர் ஒரு பெரிய கமிஷனைப் பெற்றதாகக் கூறப்படுகிறது. மேலும் அதை கேரளாவில் உள்ள ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தூதரக முன்னாள் ஊழியர் மூலம் செய்துள்ளார்.

லைஃப் மிஷன் என்பது வீடற்ற மற்றும் நிலமற்றவர்களுக்கு வீடுகளை கட்டும் ஒரு திட்டமாகும். மேலும் இந்த திட்டத்தின் மீது பினராயி விஜயன் மிக அதிகம் ஆர்வம் காட்டியுள்ளார். திருச்சூர் மாவட்டத்தில் இந்த திட்டத்திற்கான 20 கோடி ரூபாய் எவ்வளவு விரைவாக வெளியேற்றப்பட்டது என்பதை ஊடகங்கள் இன்று வெளிப்படுத்தின.

ஒரே நாளில் இந்த திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டதாக ஆவணங்கள் காண்பித்தன. சட்டத் துறை மேற்கொண்ட ஆய்வுகளைக் கண்டும் காணாமல், ஒப்பந்தத்தின் நகலைப் பெறுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பே அனைத்தும் கைமாறியுள்ளதாகக் கூறப்படுகிறது.

கேரள அமைச்சரவை ஒப்புதல் அளித்த பின்னர் தான் இந்த திட்டம் நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சட்டத்துறை விரும்பியது. ஆனால் அதற்கு பதிலாக, அனைத்து அனுமதிகளும் ஒரே நாளில் வழங்கப்பட்டன. இப்போது இடைநீக்கம் செய்யப்பட்ட பினராயி விஜயனின் முதன்மை செயலாளரும் தகவல் தொழில்நுட்ப செயலாளருமான எம்.சிவசங்கர் தான் இந்த திட்டத்தை அவசர அவசரமாக நிறைவேற்றியுள்ளார்.

சிவசங்கருக்கும் ஸ்வப்னா சுரேஷுக்கும் இடையிலான உறவு இப்போது திறந்த நிலையில் உள்ள. ஆனால் 10’ஆம் வகுப்பைக் கூட தாண்டாத ஒரு பெண்ணுக்கு (அவரது சகோதரரின் கூற்றுப்படி) ஐக்கிய அரபு எமிரேட் தூதரகத்தில் வேலை கிடைத்தது. பின்னர் ஐ.டி துறையில் மாதந்தோறும் 1.7 லட்ச ரூபாய் சம்பளத்தில் எப்படி வேலை கிடைத்தது என்பது அனைவருக்கும் குழப்பமாக உள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட் தொண்டு அமைப்பின் நிதியைப் பயன்படுத்தி வீட்டுவசதித் திட்டம் நடைபெற்று வரும் திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்த காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் அனில் அக்காரா, உள்ளூர் நிர்வாக அமைச்சர் ஏ.சி.மொய்தீன் அனைத்து விதிகளையும் மீறியதில் ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார்.

“இது அரசாங்க நிலத்தில் வரவிருக்கும் ஒரு திட்டமாகும். இதை நிர்மாணிப்பதற்கான ஒப்பந்தம் ஒரு தனியார் பில்டர் யூனிடேக்கிற்கு எவ்வாறு வழங்கப்பட்டது என்பதை அனைவரும் அறிய விரும்புகிறார்கள். மொய்தீன் பதவிப் பிரமாணத்தை மீறியதால் இது குறித்து உண்மையை வெளிப்படுத்த வேண்டும்” என்று அக்காரா கூறினார் .

ஸ்வப்னா சுரேஷின் சொந்த ஒப்புதலின் படி, அவர் இந்த திட்டத்திற்கான கமிஷனாக ரூ 1 கோடி பெற்றதாகவும் இந்த தொகையே வாங்கி லாக்கரில் வைக்கப்பட்டிருந்ததாகவும் பல்வேறு விசாரணை அமைப்புகளிடம் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் முதலில் எழுப்பப்பட்டபோது அனைத்து குற்றச்சாட்டுகளையும் ஆதாரமற்றது என்று நிராகரித்த விஜயன், இப்போது தன்னை தற்காத்துக் கொள்வது கடினம் எனக் கூரப்பப்டுகிறது.

தங்க கடத்தல் மோசடி விவகாரத்தில் இங்குள்ள ஐக்கிய அரபு எமிரேட் தூதரகத்தின் முன்னாள் ஊழியர் சரித், துபாயில் இருந்து திருவனந்தபுரத்திற்கு 30 கிலோ தங்கத்தை இராஜதந்திர லக்கேஜ்களில் கடத்த வசதி செய்தபோது சுங்கத் துறையால் ஜூலை 5’ஆம் தேதி கைது செய்யப்பட்டார்.

சிவசங்கருடனான ஸ்வப்னா சுரேஷின் தொடர்புகள் பொதுமக்களிடையே வெளிவந்ததால் ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவசங்கர் பின்னர் இரு பதவிகளிலிருந்தும் நீக்கப்பட்டு பின்னர் பினராயி விஜயனால் இடைநீக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Views: - 25

0

0