ஆர்எஸ்எஸ் பிரமுகர் பட்டப்பகலில் வெட்டிக்கொலை : SDPI கட்சியினரின் சதிவேலையா..? விசாரணையை திருப்பும் போலீசார்!!

Author: Babu Lakshmanan
15 November 2021, 4:00 pm
Rss murder - updatenews360
Quick Share

கேரளாவில் ஆர்எஸ்எஸ் பிரமுகர் பட்டப்பகலில் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரளாவைச் சேர்ந்த ஆர்எஸ்எஸ் பிரமுகரான சஞ்சித் (26), தனது மனைவியுடன் இன்று காலை பாலக்காடு மாவட்டம் எல்லப்புள்ளியில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த 4 பேர் கொண்ட கும்பல், அவரது வாகனத்தை வழிமறித்தது. இதனால், பதற்றமடைந்த சஞ்சித் உஷாராவதற்குள், அந்தக் கும்பல் கொடூரமாக அவரைத் தாக்கி விட்டு, அங்கிருந்து தப்பிச் சென்றது.

இதனைக் கண்ட மனைவி அலறியடித்து, அக்கம்பக்கத்தினரை அழைத்தார். இதையடுத்து, பலத்த காயங்களுடன் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த சஞ்சித், அருகே இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சஞ்சித் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இது தொடர்பாக தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, கொலை நடந்தது பற்றி விசாரித்தனர். பின்னர், அப்பகுதியில் போலீசாரும் பாதுகாப்பு பணிக்கு குவிக்கப்பட்டனர். இதனிடையே, இந்திய சமூக ஜனநாயக கட்சியின் நன்கு திட்டமிடப்பட்ட அரசியல் கொலை என்றும், ஆளும் கட்சியின் ஆதரவு அக்கட்சிக்கு கிடைத்துள்ளதால் கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக பாலக்காடு மாவட்ட பாஜக தலைவர் கே.எம். ஹரிதாஸ் குற்றம்சாட்டி உள்ளார்.

போலீசாரும் எஸ்டிபி கட்சியினருக்கு தொடர்பு இருக்கிறதா…? என்ற கோணத்தில் விசாரிக்கத் தொடங்கியுள்ளனர்.

Views: - 288

0

0