கேரளாவில் மீண்டும் பள்ளிகள் திறப்பு: வழிகாட்டு முறைகள் வெளியீடு

Author: kavin kumar
9 October 2021, 11:19 pm
Gujarat Schools Open -Updatenews360
Quick Share

கேரளாவில் நவம்பர் 1-ந்தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பவதையொட்டி வழிகாட்டு முறைகளை அரசு வெளியிட்டுள்ளது.

கேரளாவில் கொரோனா தொற்று குறைந்து வருவதால் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பள்ளிகள் திறப்பது குறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.அதனைதொடர்ந்து, ஒன்று முதல் 7ஆம் வகுப்பு வரை, 10 மற்றும் 12ஆம் வகுப்புகளை நவம்பர் 1ஆம் தேதி முதல் திறக்க உத்தரவிட்டுள்ளார். மற்ற வகுப்புகளை நவம்பர் 15ஆம் தேதி திறக்கலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.இந்த நிலையில் பள்ளிகள் திறக்கப்படும் போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை கேரள அரசு வெளியிட்டுள்ளது.வழிகாட்டு நெறிமுறைகள் கூறப்பட்டிருந்தாவது:- நவம்பர் 1-ந்தேதி முதல் கேரளாவில் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் போது பெற்றோர் அனுமதியுடன் வரும் மாணவர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். மாணவர்களை சமூக இடைவெளியுடன் வகுப்புகளில் அமர வைக்க வேண்டும். இதை பள்ளி ஆசிரியர்கள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

முதல் 2 வாரங்கள் மாணவர்களுக்கு மதியம் வரை மட்டுமே ஆசிரியர்கள் பாடங்களை நடத்த வேண்டும். பள்ளியை தூய்மையாக வைத்திருப்பதோடு, கிருமி நாசினி தெளிக்க வேண்டும். மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவது குறித்து பள்ளிகள் முடிவு செய்து கொள்ளலாம்.மேலும் பள்ளிகள் திறக்கப்பட்டாலும் தொடர்ந்து ஆன்லைன் முறையில் பாடங்களை நடத்த வேண்டும். ஆட்டோக்களில் 3 மாணவர்களை மட்டுமே அழைத்து வர வேண்டும். பள்ளிக்கு வரும் மாணவர்களின் உடல் வெப்ப நிலையை தினமும் பரிசோதனை செய்ய வேண்டும்.அனைத்து பள்ளிகளிலும் அவசர நேரத்தில் டாக்டர்களின் சேவை உறுதி செய்யப்படும். பள்ளி மாணவர்கள் முதல் 2 வாரங்களுக்கு சீருடை அணிவது கட்டாயம் இல்லை. மாணவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Views: - 265

0

0