காரில் தரதரவென இழுத்துச் சென்று தூக்கி வீசப்பட்ட சுங்கச்சாவடி ஊழியர்… பகீர் கிளப்பும் சிசிடிவி காட்சிகள்..!!

Author: Babu Lakshmanan
12 August 2022, 5:42 pm
Quick Share

கேரளாவில் கட்டணம் கேட்ட கொல்லம் சுங்கச்சாவடி ஊழியரை, காரில் தரதரவென இழுத்துச் சென்று வீசிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கொல்லம் புறவழிச்சாலையில் உள்ள காவநாடு சுங்கச்சாவடியில் குறிப்புழையை சேர்ந்த அருண் என்பவர் ஊழியராக பணியாற்றி வருகிறார். அவ்வழியாக வந்த வாகனத்திற்கு அருண், சுங்க கட்டணம் கேட்டுள்ளார். அப்போது, அந்த வாகனத்தில் இருந்த நபர், தர மறுத்ததாக தெரிகிறது.

அப்போது, நிகழ்ந்த வாய்த்தகராறில் அருண் காரிலிருந்தவர்களால் தாக்கப்பட்டார். மேலும், காரினுள் அமர்ந்தவாறு, அருணை பிடித்துக் கொண்டு, சுங்கச்சாவடியில் இருந்து சிறிது தூரம் வரை தரதரவென இழுத்துச் சென்றுள்ளார் அந்த கார் ஓட்டுனர். பின்னர், ஒருகட்டத்தில், காரின் வேகம் அதிகரித்ததை தொடர்ந்து, அருண் சாலையில் தூக்கி வீசப்பட்டார். இதில், அவர் பலத்த காயமடைந்தார்.

காயமடைந்த அருண் கொல்லத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். KL 26 F 9397 என்ற இலக்கம் கொண்ட காரில் வந்தவர்களே இந்த வன்முறையில் ஈடுபட்டனர். இந்தக் காட்சி சுங்கச்சாவடியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான நிலையில், அந்த காட்சியை ஆய்வு செய்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவர்களை தேடி வருகின்றனர்.

Views: - 539

0

0