சைவ உணவை விரும்பு உண்ணும் 75 வயது கோவில் முதலை உயிரிழப்பு… சடங்கு செய்து பக்தர்களின் அஞ்சலிக்கு பிறகு உடல் புதைப்பு..!!

Author: Babu Lakshmanan
10 October 2022, 2:13 pm
Quick Share

கேரளாவில் கோவில் குளத்தில் வாழ்ந்து வந்த, சைவ உணவை மட்டும் விரும்பி சாப்பிடும் 75 வயது முதலை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காசர்கோடு மாவட்டம் அனந்தபுரா என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற பெருமாள் கோவில். இந்த கோவிலின் வளாகத்தில் உள்ள குளத்தில் 70 ஆண்டுகளுக்கும் மேலாக முதலை ஒன்று வாழ்ந்து வந்துள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் பெருமாளுடன் இந்த முதலையையும் கடவுளாக நினைத்து வழிபட்டு வந்தனர்.

சைவ உணவை விரும்பு உண்ணும் 75 வயது கோவில் முதலை உயிரிழப்பு… சடங்கு செய்து பக்தர்களின் அஞ்சலிக்கு பிறகு உடல் புதைப்பு..!!

இந்த முதலை குளத்திற்கு எப்படி வந்தது..? யார் கொண்டு வந்து விட்டது…? எப்போது வந்தது..? என்ற தகவல் ஏதும் தெரியாத நிலையில், இந்த முதலை பக்தர்களுடன் மிகவும் நெருக்கமாகவே இருந்து வந்துள்ளது. இந்த முதலையை பக்தர்கள் மற்றும் கோவில் நிர்வாகத்தினர் பபியா என்று பெயரிட்டு அழைத்து வந்துள்ளனர்.

சைவ உணவை விரும்பு உண்ணும் 75 வயது கோவில் முதலை உயிரிழப்பு… சடங்கு செய்து பக்தர்களின் அஞ்சலிக்கு பிறகு உடல் புதைப்பு..!!

மேலும், கடவுளுக்கு படைக்கப்படும் புளிசோறு, பொங்கல் உள்ள பிரசாதங்களை, முதலைக்கும் பக்தர்கள் கொடுத்து வந்துள்ளனர். இதனால், தான் ஒரு மாமிச உண்ணி என்பதை மறந்து, முழுக்க முழுக்க சைவ பட்சியாகவே இந்த முதலை வாழ்ந்து வந்தது.

சைவ உணவை விரும்பு உண்ணும் 75 வயது கோவில் முதலை உயிரிழப்பு… சடங்கு செய்து பக்தர்களின் அஞ்சலிக்கு பிறகு உடல் புதைப்பு..!!

இதன் முழுவதும் இந்திய அளவில் மிகவும் பிரபலமடைந்த பபியாவை, பெருமாளின் தூதர் என சிலர் நம்புகின்றனர். இந்த நிலையில் 75 வயதான பபியா, தற்போது உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இறந்து போன முதலையை தற்போது பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டு, பின்னர் உடல் புதைக்கப்பட்டது.

சைவ உணவை விரும்பு உண்ணும் 75 வயது கோவில் முதலை உயிரிழப்பு… சடங்கு செய்து பக்தர்களின் அஞ்சலிக்கு பிறகு உடல் புதைப்பு..!!

இதனிடையே, கோவில் குளத்தில் நிறைய மீன்கள் இருந்தாலும், பபியா முதலை அந்த மீன்களை இதுவரையில் தாக்கவோ, அவைகளை சாப்பிட முயன்றதோ கிடையாது என்றும், அந்த முதலை நான் வைக்கும் சோற்று உருண்டைகளைத்தான் விரும்பி சாப்பிடும் என்கிறார் கோவில் பூசாரி.

சைவ உணவை விரும்பு உண்ணும் 75 வயது கோவில் முதலை உயிரிழப்பு… சடங்கு செய்து பக்தர்களின் அஞ்சலிக்கு பிறகு உடல் புதைப்பு..!!
Views: - 535

1

0