‘உறுப்புகளை தானம் செய்து 6 பேரின் உயிரை காப்பாற்றிய இளைஞர்’ – கேரளாவில் நடைபெற்ற நெகிழ்ச்சி சம்பவம்..!
15 August 2020, 1:53 pmவிபத்தில் மூளை சாவு அடைந்த இளைஞர் ஒருவர் உறுப்புகளை தானம் செய்துள்ளார்.
கேரள மாநிலம் கோட்டையம் மாவட்டத்தை சேர்ந்தவர் எம்.ஆர் சஜி. இவரின் 24 வயதான மகன் டெண்டுல்கருக்கு சமீபத்தில் கோர விபத்து ஒன்று நிகழ்ந்தது. இந்தநிலையில் அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட வந்த நிலையில் டெண்டுல்கருக்கு மூளைச்சாவு ஏற்பட்டு விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதனை தொடர்ந்து அவருக்கு அளிக்கப்பட்டு வந்த சிகிச்சையில் முன்னேற்றம் இல்லாததால் மருத்துவர்கள் கை நெகிழ்ந்தனர். இதனால், பெரும் மன வேதனை அடைந்த அவரின் பெற்றோம் டெண்டுல்கரின் உடல் உறுப்புக்களை தானம் செய்ய முன்வந்தனர்.
இதையடுத்து கோட்டயம் அரசு மருத்துவமனையில் டெண்டுல்கருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, இதயம், கல்லீரல், இரண்டு சிறுநீரகங்கள் மற்றும் இரண்டு கண்கள் எடுக்கப்பட்டன.
கோட்டயம் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெறும் நோயாளிக்கு ஒரு இதயம் மற்றும் சிறுநீரகம், கொச்சி ஆம்ஸ்டர் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெறும் நோயாளிக்கு கல்லீரல், எர்ணாகுளம் மருத்துவ அறக்கட்டளை மருத்துவமனைக்கு ஒரு சிறுநீரகம் மற்றும் மருத்துவக் கல்லூரியில் 2 வங்கிக்கு நன்கொடை வழங்கப்பட்டது. கோட்டயம் மருத்துவக் கல்லூரியில் மற்றொரு இதய மாற்று அறுவை சிகிச்சையும் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது.
இறந்த பின்பும் 6 பேரின் உயிரை காப்பாற்றிய இளைஞர் மற்றும் அவரின் பெற்றோருக்கு பொதுமக்கள் மத்தியில் கண்ணீர் மல்க பாராட்டுகள் குவிந்து வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியை சேர்ந்த மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.