கேரளாவில் மெல்ல மெல்ல தலைதூக்கும் ஜிகா வைரஸ் : பாதித்தோர் எண்ணிக்கை 21 ஆக உயர்வு

13 July 2021, 7:50 pm
veena george - - updatenews360
Quick Share

கேரளாவில் ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 21 ஆக அதிகரித்து இருப்பது அம்மாநில மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்றின் 2வது அலையின் தாக்கம் கட்டுக்குள் வந்துள்ளது. ஆனால், கேரளாவில் இன்னும் நாள்தோறும் சராசரி பாதிப்பு உச்சத்தை தொட்டே வருகிறது. இதனால், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதில் அம்மாநில அரசு தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

இந்த சூழலில், கேரளாவில் முதல்முறையாக ஜிகா வைரஸ் பாதிப்பும் கண்டறியப்பட்டுள்ளது. 24 வயதுள்ள கர்ப்பிணி பெண்ணை தொடர்ந்து 15 பேருக்கு இந்த பாதிப்பு இருப்பது தெரிய வந்தது.

டெங்கு, சிக்கன்குனியா ஆகிய நோய்களை பரப்பக்கூடிய கொசுக்களின் மூலமாகவே ஜிகா வைரஸும் பரவுவதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்தனர்.

ஜிகா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளில் கேரள அரசு ஈடுபட்டு வரும் நிலையில், அந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது.

ஜிகா வைரஸ் பாதிப்பு குறித்து கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியதாவது :- கேரளாவில் ஏற்கனவே 19 பேருக்கு ஜிகா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதியாகியிருந்தது. இதன் மூலம் கேரளாவில் ஜிகா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் ஜிகா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த பல நடவடிக்கைளை எடுத்து வருகிறோம், என தெரிவித்துள்ளார்.

Views: - 128

0

0