கொடுத்த கடனை திருப்பி கேட்ட பெண்ணுக்கு ‘உதை‘ : ஆட்டோ ஓட்டுநரின் அடாவடி காட்சி!!
Author: Udayachandran RadhaKrishnan7 August 2021, 11:22 am
ஆந்திரா : வட்டிக்கு வாங்கி கொடுத்த பணத்தை திருப்பி கேட்ட பெண்ணை உதைத்து கீழே தள்ளிய ஆட்டோ ஓட்டுநரின் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
ஆந்திர மாநிலம் விஜயவாடா அருகே உள்ள மங்களகிரியில் வசித்து வரும் கோவர்த்தினி என்பவர் அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவரான கோபிகிருஷ்ணாவிற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன் வேறு ஒருவரிடம் இருந்து 3 லட்சம் ரூபாய் பணம் வாங்கி வந்து கொடுத்தார்.
இரண்டு ஆண்டுகள் கடந்த பின்னும் ஆட்டோ டிரைவர் கோபிகிருஷ்ணா வாங்கிய கடனை திருப்பி கொடுக்கவில்லை. மேலும் வட்டியும் செலுத்தவில்லை. இந்த நிலையில் நேற்று கோபி கிருஷ்ணாவை சந்தித்த கோவர்த்தினி அசல், வட்டி இரண்டையும் திருப்பிக் கேட்டார்.
அப்போது இரண்டு பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் ஆட்டோவிலிருந்த கோபிகிருஷ்ணா திடீரென்று கோவர்தணியை எட்டி உதைத்து கீழே தள்ளினார். இதில் சுருண்டு விழுந்தார் கோவர்த்தினி. இது தொடர்பான காட்சிகள் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து இந்த சம்பவம் குறித்து கோவர்த்தினி போலீசாருக்கு தகவல் அளித்தார்.அங்கு வந்த போலீசார் கோவர்த்தினியிடம் விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கோபிகிருஷ்ணாவை தேடி வருகின்றனர்.
0
0