அதிக பக்தர்களின்றி கும்பமேளாவை முடித்துக் கொள்ள வேண்டும் : பிரதமர் மோடி கோரிக்கை!!

17 April 2021, 11:46 am
Modi Request -Updatenews360
Quick Share

கும்பமேளாவில் அதிக பக்தர்களின்றி முடித்துக் கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

ஹரித்வாரில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கும் , சாதுக்களுக்கும் கொரோனா பரவி வருகிறது. இதனால் கும்பமேளாவை பெயரளவுக்கு நடத்துவதே சரியாக இருக்கும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் அதிகளவில் பக்தர்கள் கூடாமல் பெயரளவுக்கு கும்பமேளாவை நடத்துவது சரியாக இருக்கும் என்றும் , ஏப்ரல் 30ஆம் தேதி வரை கும்பமேளா திட்டமிட் நிலையில் இந்த கோரிக்கையை பிரதமர் மோடி வைத்துள்ளார்.

இது தொடர்பாக ஜூனா அகாராவின் சுவாமி அவ்தேஷானந்த் கிரியுடன் தொலைபேசியில் பேசிய பிரதமர் மோடி, கும்பமேளாவை பெயரளவுக்கு நடத்துவதே சரியாக இருக்கும் என்றும் அதிகளவு பக்தர்கள் கூடுவது கொரோனாவுக்கு பலம் கூடிவிடும் என்றும் கூறியுள்ளார்.

பிரதமரின் வலியுறுத்தலுக்கு பதிலளித்த சுவாமி அவ்தேஷானந்த் கிரி, உயிர்களை காப்பாற்றுவது புனிதமானது என்றும் கொரோனா நெறிமுறைகளை பின்பற்றி பெருமளவில் புனித நீராடுவதற்கு மக்கள் கூட வேண்டாம் என்றும் பிரமர் வேண்டுகோளை மதிக்கிறோம் என கூறியுள்ளார்.

Views: - 29

0

0