ராமர் கோவில் கட்டுமானத்திற்கு நன்கொடை வசூலித்ததை தடுத்த இஸ்லாமியர்கள்..! வன்முறை வெடித்ததில் மூன்று பேருக்கு காயம்..!
18 January 2021, 3:38 pmகுஜராத்தின் கட்ச் மாவட்டத்தில், அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான நிதி வசூலிக்கும் பேரணியில் இரண்டு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக போலீசார் இன்று தெரிவித்தனர்.
இதற்கிடையே நேற்று மாலை இந்த சம்பவம் நடந்த பின்னர், கிடானா கிராமத்தில் மோதல் நடந்த இடத்திலிருந்து சுமார் 200 மீட்டர் தொலைவில் ஒரு நபரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
மேலும் அந்த வன்முறையின் போது அவர் கொல்லப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர் என கட்ச் (கிழக்கு) காவல் கண்காணிப்பாளர் மயூர் பாட்டீல் தெரிவித்தார்.
உத்தரபிரதேசத்தின் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான நிதி சேகரிப்பதற்காக ஊர்வலம் நடந்தபோது, நேற்று மாலை கட்ச் பகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் இஸ்லாமியர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து இரு குழுக்கள் மோதிக் கொண்டு ஒருவருக்கொருவர் கற்களை வீசத் தொடங்கினர் என காந்திதாம் (பி-பிரிவு) காவல் நிலையம் தெரிவித்துள்ளது. சில வாகனங்களும் கலகக்காரர்களால் தீ வைத்துக் கொளுத்தப்பட்டுள்ளன என அவர் மேலும் கூறினார்.
பின்னர் காவல்துறையினர் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசி நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர் என அவர் கூறினார். இந்த சம்பவத்தில் மூன்று பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி தெரிவித்தார்.
இதற்கிடையே கிராமத்தின் வெளியே ஒரு குழு ஒரு ஆட்டோரிக்ஷாவைத் தாக்கியதில் ஒருவர் கொல்லப்பட்டார். மேலும் மோதலின் ஒரு பகுதியாக அவர் கொல்லப்பட்டாரா என்று போலீசார் கண்டுபிடிக்க முயற்சிக்கின்றனர் என்று போலீஸ் சூப்பிரண்டு மயூர் பாட்டீல் தெரிவித்தார்.
“மோதல் வெடித்த இடத்திலிருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ள கிராமத்தின் எல்லையில் அடையாளம் தெரியாத நபர்களால் அந்த நபர் கொல்லப்பட்ட பின்னர் நாங்கள் கொலை வழக்கு பதிவு செய்துள்ளோம். அவரைக் கொன்றது யார், ஏன் என்று கண்டுபிடிக்க முயற்சிக்கிறோம்.” என்று பாட்டீல் செய்தியாளர்களிடையே கூறினார் .
0
0