பாஜக தேசிய தலைவருடன் தமிழக பாஜக தலைவர் சந்திப்பு – பரபரப்பான அரசியல் சூழலில் நடைபெற்ற ஆலோசனை

3 October 2020, 9:46 am
murugan jpnatta meet in dehi - updatenes360
Quick Share

டெல்லி: பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் டெல்லியில் சந்தித்து பேசினார்.

பாஜக தேசிய நிர்வாகிகள் நியமனத்தில் தமிழகம் புறக்கணிப்பு, சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவை, தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் டெல்லியில் நேற்று சந்தித்துப் பேசினார்.

சுமார் 1 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற இந்த சந்திப்பின்போது, நடப்பு அரசியல் நிலவரங்கள், தமிழக சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

கூடிய விரைவில் மத்திய அரசின் பல்வேறு வாரியங்கள், அமைப்புகளுக்கும் நிர்வாகிகள் நியமிக்கப்பட உள்ளனர். இந்நிலையில் தமிழகத்தில் இருந்து யார் யாரை இப்பொறுப்புகளுக்கு நியமிக்கலாம் என்பது குறித்தும் இந்தச் சந்திப்பில் பேசப்பட்டதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் இருந்து தேசிய நிர்வாகிகள் யாரும் இல்லாததால் மாநிலத் தலைவர் எல்.முருகன் மற்றும் மாநில அமைப்புப் பொதுச் செயலாளர் கேசவ விநாயகன் இருவருமே அனைத்து முடிவுகளையும் எடுக்கும் நிலையில் உள்ளனர். இத்தகைய சூழலில், ஜே.பி.நட்டா – எல்.முருகன் சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Views: - 5

0

0