லக்கிம்பூர் வன்முறை : போராட்டத்தில் புகுந்து விவசாயிகளை ஏற்றி நிற்காமல் சென்ற கார்.. (வீடியோ)!!
Author: Udayachandran RadhaKrishnan5 October 2021, 4:56 pm
உத்தரபிரதேசம் லக்கிம்பூர் பகுதியில் விவசாயிகள் நடத்தி போராட்டத்தின் போத மத்திய அமைச்சர் மகனின் கார் நுழைந்த காட்சிகளை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.
அந்த வீடியோவில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளின் பின்னால் வந்த கார் அவர்கள் மீது மோதிவிட்டு செல்கிறது. அந்த கார் பின்னால் வந்த மற்றொரு காரும் நிற்காமல் சென்றது வீடியோவில் தெரியவந்துள்ளது.
விவசாயிகளின் போராட்டத்திற்குள் காரை ஓட்டி வந்தது மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆசிஸ் மிஸ்ரா கார் ஓட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து விவசாயிகள் வன்முறையில் இறங்கியதாகவும் இதில் 8 பேர் வரை உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக ஆசிஸ் மிஸ்ரா மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
1
0