சிறையில் இருந்து லாலு விரைவில் விடுதலை? மேலும் ஒரு வழக்கில் கிடைத்தது ஜாமீன்!!

17 April 2021, 1:43 pm
Lalu Prasad -Updatenews360
Quick Share

கால்நடை தீவன வழக்கல் பீஹார் முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ்விற்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

பீஹார் முன்னாள் முதலமைச்சரும், ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ், மாட்டு தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்று சிறைவாசம் இருந்தார்.

பின்னர் உடல்நலக்குறைவு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வருகிறார். இந்த நிலையில் அவர் மீதுள்ள ஊழல் வழக்குகளில் மூன்று வழக்குகளில் ஜாமீன் வழங்கி நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டது.

இந்த நிலையில் மேலும் ஒரு வழக்கான தும்கா கருவூல வழக்கில் லாலு பிரசாத் யாதவ்விற்கு ராஞ்சி உயர்நீதிமன்றம் ஜாமீன் வழக்கி உத்தரவிட்டுள்ளது. இதனால் சிறையில் இருந்து விரைவில் விடுதலை செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

Views: - 26

0

0