ஜம்மு-காஷ்மீரில் நிலச்சரிவு: 3 பேர் பலி

Author: Udhayakumar Raman
23 October 2021, 9:48 pm
Quick Share

ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட நிலச்சரிவால் 3 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் உள்ள அவந்திபோரா மாவட்டத்தில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணத்தால் நிலச்சரிவு அப்பகுதியில் ஏற்பட்டுள்ளது. இதனால் நிலச்சரிவில் சிக்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், காயமடைந்த ஒருவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இதனால் தற்போது அப்பகுதியில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு வருகின்றனர்.

Views: - 182

0

0