மருத்துவ துறையில் புது அத்தியாயம்: மருத்துவ அடையாள அட்டை எண் வழங்கும் திட்டம்…நாடு முழுவதும் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி..!!

Author: Aarthi Sivakumar
27 September 2021, 12:59 pm
Quick Share

புதுடெல்லி: நாட்டு மக்கள் அனைவருக்கும் அவரவர் மருத்துவ தகவல்கள் அடங்கிய பிரத்யேக அடையாள எண் வழங்கும் திட்டத்தை நாடு முழுவதம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

மின்னணு மருத்துவ திட்டம் நாடு முழுவதும் அறிமுகம் செய்யப்படும் என கடந்த ஆண்டின் சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். தற்போது சோதனை முயற்சியாக 6 யூனியன் பிரதேசங்களில் மின்னணு மருத்துவ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இத்திட்டம் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, இன்றைய தினம் இந்திய மருத்துவ துறையில் புதிய அத்தியாயம் எழுதப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார். நவீன மின்னணு தொழில்நுட்பங்கள் வாயிலாக மருத்துவ சேவைகளை மக்கள் எளிதாக பெற வழிவகுப்பதே மின்னணு மருத்துவ திட்டம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த திட்டத்தின்கீழ் ஒவ்வொருவருக்கும் பிரத்யேக அடையாள எண் வழங்கப்படுவதுடன் செல்ஃபோன் செயலி மூலம் மருத்துவ சேவைகளை எளிதாகப் பெற வழி ஏற்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய டிஜிட்டல் சுகாதார திட்டத்தை காணொலி வாயிலாக பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். டிஜிட்டல் சுகாதார திட்டத்தின் மூலம் ஒவ்வொரு நபருக்கும் ஐடி, அடையாள எண் உருவாக்கப்பட்டு அட்டை தரப்படும். தனிநபர் பெற்று மருத்துவ சிகிச்சைகள் உள்பட மருத்துவர் சார்ந்த தகவல்கள் அடங்கிய களஞ்சியமாக அட்டை இருக்கும்.

மருத்துவர்கள், மருத்துவமனைகள் மருத்துவ சேவைகளை வழங்க ஏதுவாக மருத்துவ அடையாள அட்டை தரப்படுகிறது. திட்டத்தில் மருத்துவ ஆவணங்களை அணுகவும், பரிமாறவும் மக்களிடம் முன் அனுமதி பெறப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Views: - 163

0

0