கேரள காங்கிரஸ் எம்பிக்களை தொடர்ந்து இடதுசாரி எம்பிக்களுக்கும் அனுமதி மறுப்பு : சூடு பிடிக்கும் லட்சத்தீவு விவகாரம்!!

6 July 2021, 2:20 pm
Lakshadweep- Updatenews360
Quick Share

லட்சத்தீவில், மக்களின் பிரச்னைகளை அறிய விரும்புவதாக கூறிய கேரள இடதுசாரி எம்.பி.,க்களின் வருகைக்கு, யூனியன் நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது.

லட்சத்தீவின் நிர்வாகியாக பிரஃபுல் பட்டேலை திரும்ப பெறக்கோரி பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். நாட்டின் மிகச்சிறிய யூனியன் பிரதேசமான லட்சத்தீவின் நிர்வாகியாக பிரஃபுல் பட்டேல் என்பவரை மத்திய அரசு சமீபத்தில் நியமித்தது.

அவர் மேற்கொண்ட் நடவடிக்கைக்கு லட்சத்தீவு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து பல்வேறு தரப்பினரும் லட்சத்தீவு நிர்வாகிளை திரும்ப பெற வலியுறுத்தினர்.

கேரள மாநிலத்தில் லட்சத்தீவு மக்களுக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. கேரள சட்டமன்றத்தில் லட்சத்தீவு நிர்வாகியை திரும்பப் பெற வலியுறுத்தி தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில் கேரளாவை சேர்ந்த இடதுசாரி எம்.பிக்கள் லட்சத்தீவு வருவதற்கு யூனியன் பிரதேச நிர்வாகம் தடை விதித்துள்ளது. கடந்த வாரம் காங்கிரஸ் எம்.பி.,க்கள் குழுவுக்கு அனுமதி லட்சத்தீவு யூனியன் பிரதேச நிர்வாகம் அனுமதி மறுத்தது. கொரோனா பரவல் காரணத்தை காட்டி அனுமதி மறுக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

Views: - 166

0

0