நீர்மின் உற்பத்தி நிலையத்தில் சிறுத்தை நடமாட்டம்: பொதுமக்கள் மற்றும் ஊழியர்களுக்கு எச்சரிக்கை…பதற வைக்கும் வீடியோ!!
Author: Aarthi Sivakumar1 February 2022, 6:01 pm
ஆந்திரா: ஸ்ரீசைலம் நீர்மின் உற்பத்தி நிலையத்தில் சிறுத்தை நடமாட்டத்தால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டம் ஸ்ரீசைலம் அணையின் வலது புறம் மாநில அரசின் நீர்மின் உற்பத்தி நிலையம் உள்ளது. இந்த நீர்மின் நிலையத்தில் ஏராளமான ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், நேற்றிரவு சிறுத்தை வந்து சென்றதால் அங்குள்ள ஊழியர்கள் பீதியடைந்துள்ளனர். வனப்பகுதியில் இருந்து தண்ணீர் குடிக்க அவ்வப்போது சிறுத்தை வந்துள்ளது. சிறுத்தை வருவதை பார்த்து நாய்கள் குரைத்ததையடுத்து, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தங்களது செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர்.
அவ்வப்போது சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் அங்குள்ள பாதுகாவலர்கள் மற்றும் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர். சிறுத்தை நடமாட்டம் இருந்தாலும் இதுவரை யாரையும் தாக்கவில்லை. ஆனாலும், இரவு நேரத்தில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
0
0