சேட்டா சேதி கேட்டோ.. கேரளாவில் மீண்டும் மதுபானக்கடை திறப்பு : மதுப்பிரியர்கள் உற்சாகம்!!

17 June 2021, 3:14 pm
Kerala Wineshop - Updatenews360
Quick Share

கேரளாவில் ஊரடங்கை ஒட்டி மூடப்பட்ட மதுபான கடைகள் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பல மாவட்டங்களில் திறக்கப்பட்டதால் மதுப்பிரியர்கள் வரிசையின் நின்று மதுவாங்கினர்.

கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில் கேரளாவில் ஊரடங்கு விதிக்கப்பட்டதால் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியது.

இதையடுத்து பாதிப்பின் அடிப்படையில் ஏபிசி என மூன்று பகுதிகளாக பிரித்து ஊரடங்கு தளர்வுகளை கேரள அரசு அறிவித்துள்ளது. இதையொட்டி அதிகம் பாதிப்பு இல்லாத மாவட்டங்களில் பேருந்து போக்குவரத்து மற்றும் தனியார் வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அத்தியாவசிய கடைகளையும் காலை 7 மணி முதல் மாலை 7 மணிவரை திறக்க கேரள அரசு தளர்வுகளை அறிவித்துள்ளது. இதை ஒட்டி கேரளாவில் திருவனந்தபுரம் உட்பட பாதிப்புகள் குறைவாக உள்ள மாவட்டங்களில் மதுபானக்கடைகளை காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை திறக்க அந்த மாநில அரசு அனுமதி வழங்கியுள்ளது.

கேரள மதுபானக் கடைகளில் மதுபான வகைகளுக்கு கிருமிநாசினி வழங்கி அவர்களுக்கு தெர்மல் சோதனை நடத்தி அதன் பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர். ஒரேயடியாக கூட்டம் கூடாமல் இருக்க குறிப்பிட்ட அளவு வாடிக்கையாளர்களை படிப்படியாக மது வாங்க அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

Views: - 176

0

0