இன்று முதல் நேரலை : உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வின் விசாரணை யூடியூப்பில் ஒளிபரப்பானது!!

Author: Udayachandran RadhaKrishnan
27 September 2022, 12:36 pm
SC Live Streaming - Updatenews360
Quick Share

உச்சநீதிமன்றம் 2018ல் ஒரு வழக்கில் தீர்ப்பு அளித்தபோது, ‘வழக்குகளின் விசாரணை நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட வேண்டும்’ என உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், தலைமை நீதிபதி பணியிலிருந்து ஓய்வு பெற்ற என்.வி.ரமணா, தன் கடைசி பணி நாளில் முக்கியமான சில வழக்குகளை இணையதளம் வாயிலாக நேரடி ஒளிபரப்பு செய்தார்.

இதன் தொடர்ச்சியாக சமீபத்தில், புதிய தலைமை நீதிபதி லலித் தலைமையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் கூட்டம் புதுடில்லியில் நடந்தது.

இதில், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள், ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் வழக்குகளை, இன்று செப்., 27 முதல் ‘யு டியூப்’ சேனலில் நேரடியாக ஒளிபரப்பு செய்வது என முடிவு எடுக்கப்பட்டது.

டில்லி அரசு – மத்திய அரசு இடையேயான அதிகாரம், மகாராஷ்ட்ரா அரசியல் தொடர்பான வழக்குகளையும் நேரலையில் விசாரணை மேற்கொண்டனர். இதில் பொருமாதாரத்தில் பின்தங்கியோருக்கான 10% இடஒதுக்கீடுக்கு எதிரான வழக்கு விசாரணை நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.

Views: - 300

0

0