பீகார் தேர்தலில் தனித்து போட்டியிட பஸ்வான் கட்சி முடிவு..! பாஜக கூட்டணியிலிருந்து விலகியதா..?

By: Sekar
4 October 2020, 5:27 pm
LJP_Parliamentary_Board_Meeting_UpdateNews360
Quick Share

பீகாரில் வரவிருக்கும் மூன்று கட்ட சட்டசபை தேர்தலில் தனித்துப் போட்டியிட லோக் ஜன சக்தி கட்சி முடிவு செய்துள்ளது.
2017 சட்டமன்றத் தேர்தலில் தனியாக போட்டியிட்ட பீகாரில், மணிப்பூர் மாதிரியைப் பின்பற்றுவது குறித்து கட்சி முன்னதாகவே சுட்டிக்காட்டியுள்ளது. மணிப்பூரில், எல்ஜேபி 11 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்திருந்தது. ஆனால் ஒரு இடத்தை வென்றது.

பின்னர் அவரும் பாஜகவில் இணைந்தார். முன்னதாக, 2014’ஆம் ஆண்டில், ஜம்மு-காஷ்மீரில் நடந்த சட்டமன்றத் தேர்தலிலும், ஜார்கண்டில் நடந்த 2019 சட்டமன்றத் தேர்தலின்போதும், மத்தியில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒரு பகுதியாக இருந்தபோதிலும், கட்சி தனியாக போட்டியிட்டது.

இந்நிலையில் தற்போது தனித்துப் போட்டியிடும் முடிவை எடுத்தாலும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு எதிராக நட்புரீதியான போட்டியை நடத்த எல்ஜேபி முடிவு செய்துள்ளது. அவர்கள் ஐக்கிய ஜனதா தளத்திற்கு எதிராக மட்டுமே போட்டியாளர்களை நிறுத்துவார்கள் என்றும் பாஜகவுக்கு எதிராக நிறுத்த மாட்டார்கள் என்றும்  எல்.ஜே.பி தலைமை முன்பு தெளிவுபடுத்தியுள்ளது. 

போட்டியிட 42 இடங்களை ஒதுக்க வேண்டும் என்ற கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால், தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து விலகுவதாக கட்சி முன்னர் அச்சுறுத்தியது. தொகுதி ஒதுக்கீடு தொடர்பாக பாஜகவுடன் ஒரு உடன்பாட்டை எட்ட முடியாவிட்டால், 243 இடங்களில் 143 இடங்களில் கட்சி போட்டியிடும் என்று எல்ஜேபி தலைமை கடந்த மாதம் அறிவித்திருந்தது.

பாஜகவுடன் தனக்கு எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்று எல்ஜேபி வலியுறுத்தியுள்ள நிலையில்; தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஐக்கிய ஜனதா தளம் மீது விமர்சங்களைத் தொடுத்துள்ளது. பீகார் முதலமைச்சரும் ஐக்கிய ஜனதா தளத் தலைவருமான நிதீஷ் குமாரை எல்ஜேபி தலைவர் சிராக் பஸ்வான் விமர்சித்தார். பீகாரில் வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கான வாக்குறுதிகளை நிதிஷ் நிறைவேற்றத் தவறிவிட்டார் என்றும் குற்றம் சாட்டினார்.

எல்.ஜே.பி பாஜகவுடனான உறவை முறித்துக் கொள்ளவில்லை என்பதை மீண்டும் வலியுறுத்துவதற்காக, பாராளுமன்ற வாரியம் பிரதமர் மோடியை பலப்படுத்த அனைத்து எல்.ஜே.பி உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுத்த தீர்மானத்தையும் நிறைவேற்றியது.

Views: - 45

0

0