கான்பூரை உலுக்கிய லவ் ஜிஹாத்..! இரண்டு பேரைக் கைது செய்த உத்தரபிரதேச காவல்துறை..!

31 August 2020, 12:33 pm
aRREST_uPDATEnEWS360
Quick Share

லவ் ஜிஹாத் தொடர்பான ஒரு வழக்கில் உத்தரபிரதேசத்தில் கான்பூர் போலீசார் இருவரை கைது செய்துள்ளனர். நேற்று பிற்பகுதியில் இருவரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். 
கைது செய்யப்பட்ட இருவரும் மொஹ்சின் கான் மற்றும் அமீர் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மொஹ்சின் கான் ஒரு பெண்ணுடன் நட்பு கொண்டிருந்ததாகவும், சமீர் என்று ஆள்மாறாட்டம் செய்து, பின்னர் அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

அவரது நண்பர் அமீர், மொஹ்சினின் மனைவியின் தங்கையுடன் நட்பைப் பெற்றார். ஆனால் அந்த பெண் அவர்களின் லவ் ஜிஹாத் திட்டத்தை உணர்ந்து அவரை சந்திப்பதை நிறுத்தினார். பின்னர் அவர் அமீரை திருமணம் செய்யாவிட்டால் கடுமையான விளைவுகள் ஏற்படும் என்று அச்சுறுத்தப்பட்டார்.

இதனால் இந்த விவகாரத்தை விசாரிக்க பாதிக்கப்பட்ட பெண்களின் தந்தை கான்பூர் ஐஜி மோஹித் அகர்வாலை அணுகினார். பின்னர் பங்கி காவல் நிலையத்தில் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து விசாரணையில் இறங்கிய காவல்துறை மொஹ்சின் கான் மற்றும் அமீர் ஆகியோர் நேற்று மாலை கைது செய்தது. இதே போன்ற மேலும் பல வழக்குகள் உள்ளதாகக் கூறப்படும் நிலையில், சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டு விசாரணை விரிவான விசாரணை நடத்தப்படும் என்று ஐ.ஜி. மோஹித் அகர்வால் கூறினார்.

“சிறப்பு விசாரணைக் குழு இதுபோன்ற வழக்குகளின் பட்டியலை, குறிப்பாக ஜூஹி பகுதியிலிருந்து தயாரிக்கிறது. மொபைல் கண்காணிப்பு மூலம், இதுபோன்ற விஷயங்களில் ஈடுபடும் கும்பல் ஈடுபடுகிறதா என ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. சம்பந்தப்பட்டவர்கள் அனைவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் மேலும் கூறினார்.

Views: - 3

0

0