கேரளாவில் முக்கிய பிரச்சினையாக உருவெடுத்த லவ் ஜிகாத்..! பாஜகவுக்கு ஆதரவாக திரும்பும் கத்தோலிக்க சமூகம்..!

Author: Sekar
29 March 2021, 7:07 pm
kcbc_poc_updatenews360
Quick Share

கேரள இடதுசாரி கூட்டணியில் (எல்.டி.எஃப்) அங்கம் வகிக்கும் கேரள காங்கிரஸ் (எம்) தலைவர் ஜோஸ்.கே.மணி லவ் ஜிஹாத் குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டதை அடுத்து, கூட்டணிக்குத் தலைமை தாங்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் எல்.டி.எஃப் ஆகியவை ஒரு குழப்பத்தில் சிக்கியுள்ளன. 

ஒரு தொலைக்காட்சி நேர்காணலில் பேசிய ஜோஸ்.கே.மணி, “லவ் ஜிகாத் மீண்டும் ஒரு பிரச்சினையாக வந்துள்ளது. சமூகம் அதைப் பற்றி அச்சங்களைக் கொண்டுள்ளது. பிரச்சினை மீண்டும் வெளிவந்துள்ளதால், அது குறித்த அச்சங்கள் நீக்கப்பட வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.

இந்த அறிக்கை சட்டமன்றத் தேர்தலுக்கு சற்று முன்னதாக ஆளும் இடது கூட்டணியில் சர்ச்சையைத் தூண்டியுள்ளது. இதற்கிடையே லவ் ஜிகாத் குறித்த அறிக்கைக்காக ஜோஸ்.கே.மணிக்கு கேரள கத்தோலிக்க பிஷப்ஸ் கவுன்சில் (கே.சி.பி.சி) தனது ஆதரவை தெரிவித்துள்ளது.

கே.சி.பி.சி செய்தித் தொடர்பாளர் ஜேக்கப், “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் பிற முக்கிய அரசியல் கட்சிகள் இந்த விஷயத்தில் தங்கள் நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், “லவ் ஜிகாத் இருப்பது உண்மை. கேரள காங்கிரஸ் (எம்) தலைவர் ஜோஸ்.கே.மணியின் இயல்பான பதில் குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன்.”என்று தெரிவித்துள்ளார்.

லவ் ஜிகாத் இருப்பதை முதலமைச்சர் பினராயி விஜயன் மறுத்தது குறித்து அதிருப்தி அடைந்த அவர், “லவ் ஜிகாத் இல்லை என்று முதல்வர் கூறுகிறார். அவர் தனது அரசியல் லாபங்களுக்காக இதுபோன்ற ஒரு அறிக்கையை வெளியிட்டு வருகிறார். லவ் ஜிகாத் குறித்து தேவாலயமும் பொதுமக்களும் கவலைப்படுகிறார்கள். அரசாங்கமும் அரசியல் கட்சிகளும் பிரச்சினையை தீர்க்க கடமைப்பட்டுள்ளன.” என்றார்.

எனினும், வேறுவேறு மதங்களுக்கு இடையிலான திருமணம் குறித்த தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்திய அவர், “தேவாலயம் வெவ்வேறு மதங்களைச் சேர்ந்தவர்களுக்கு இடையிலான திருமணத்திற்கு எதிரானது அல்ல. ஆனால் ஒருவரை ஒரு மதத்தை வலுக்கட்டாயமாக பின்பற்ற திருமணத்தை ஒரு ஆயுதமாக பயன்படுத்துவதை தேவாலயம் எதிர்க்கிறது.” என்றார்.

லவ் ஜிகாத் இருப்பதை முஸ்லீம் லீக் மட்டுமே மறுக்கிறது என்று ஜேக்கப் மேலும் குற்றம் சாட்டினார்.

கத்தோலிக்க வாக்குகளின் கணிசமான பகுதியைக் கொண்ட ஒரு தொகுதியான பாலாவிலிருந்து ஜோஸ் மணி இந்தமுறை தேர்தலில் போட்டியிடுகிறார். தொகுதியின் தற்போதைய சட்டமன்ற உறுப்பினரும், என்.சி.பி (கேரளா) தலைவருமான மணி.சி.கப்பனுக்கு எதிராக ஜோஸ் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் வாக்குகள் கணிசமாக உள்ள நிலையில், ஜோஸ் மணியின் கருத்து அதிக முக்கியத்துவத்தைப் பெறுகிறது. 

இதற்கிடையே கேரளாவில் உள்ள கத்தோலிக்க திருச்சபை லவ் ஜிகாத்துக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வருவதோடு, தற்போது பாஜகவின் ஆதரவையும் கோரியுள்ளது.

மற்ற கட்சிகள் இந்த விவகாரத்தில் மௌனமாக இருக்கும்போது, ​​கடந்த வாரம் வெளியிடப்பட்ட பாஜக தேர்தல் அறிக்கையில் லவ் ஜிகாத்தை எதிர்கொள்ள சிறப்பு சட்டத்தை கொண்டு வருவதாக உறுதியளித்துள்ளது.

இதனால், கேரளாவில் லவ் ஜிகாத்தால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் பாஜக ஆதரவு நிலைப்பாட்டிற்கு மாறி வருவதாகக் கூறப்படுகிறது.

Views: - 250

0

0