உடன் படித்த பள்ளி மாணவியை கொலை செய்த சக மாணவனை போலீசார் கைது செய்தனர்.
ஜார்க்கண்ட் மாநிலம் கோடா மாவட்டம் உர்ஜாநகரில் ஆங்கிலவழி பள்ளிக்கூடம் உள்ளது. இந்த பள்ளியில் 17 வயது மாணவன் பயின்று வருகிறார்.
அந்த மாணவனும் அதேவகுப்பில் பயிலும் மாணவியும் காதலித்து வந்துள்ளனர். இதனிடையே, அந்த மாணவி தனது இன்ஸ்டாகிராமில் வெறொரு இளைஞருடன் பேசி வந்துள்ளார்.
இது குறித்து காதலனான மாணவனுக்கு தெரியவந்துள்ளது. இதனால் அவன் மிகுந்த ஆத்திரமடைந்தான். இந்நிலையில், கடந்த புதன்கிழமை மாலை மாணவி ஹோலி பண்டிகை கொண்டாட தனது நண்பர்களின் வீட்டிற்கு சென்றுள்ளார்.
செல்லும் வழியில் அந்த மாணவியை அவரது காதலனான மாணவன் இடைமறித்துள்ளான். அப்போது, இன்ஸ்டாவில் வெறொரு இளைஞடன் பேசியதால் ஆத்திரமடைந்த காதலன் தான் மறைத்து வைத்திருந்த இரும்பு கம்பியால் காதலியை சரமாரியாக தாக்கினார்.
இந்த கொடூர தாக்குதலில் அந்த மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். ஹோலி பண்டிகை கொண்டாட சென்ற தனது மகள் வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில் வியாழக்கிழமை காலை மாணவியின் உடல் கிராமத்திற்கு அருகே உள்ள வயல்வெளியில் கண்டுபிடிக்கப்பட்டது.
மாணவி பிணமாக கிடந்த இடத்திற்கு அருகே மாணவியின் செல்போனும் அவரை கொலை செய்ய பயன்படுத்திய இரும்பு கம்பியும் கிடந்தன. இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்ட போலீசார் மாணவியை கொலை செய்த 17 வயது மாணவனை கைது செய்தனர்.
மாணவன் தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்ட நிலையில் அவன் சிறையில் அடைக்கப்பட்டான். இன்ஸ்டாகிராமில் வெறொரு இளைஞருடன் பேசியதால் காதலியை காதலன் அடித்துக்கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.