உறவு முறையில் தங்கை என தெரிந்தும் ‘லவ் டார்ச்சர்’ : காரில் இளம்பெண்ணை கதற கதற கடத்திச் சென்ற அண்ணன்.. கொலை செய்ய முயற்சி!!

Author: Udayachandran RadhaKrishnan
4 August 2022, 2:37 pm
Kidnapping Sister Love Torture - Updatenews360
Quick Share

ஆந்திரா : ஒருதலையாக காதலித்த அண்ணனை திருமணம் செய்து கொள்ள மறுத்த தங்கையை நண்பர்களுடன் சேர்ந்து காரில் கடத்தி கொலை செய்ய முயன்ற அண்ணனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் அம்மராஜி பேட்டை கிராமத்தை சேர்ந்த பாஸ்கர்,மைதிலி ஆகியோர் உறவு முறையில் அண்ணன் தங்கை. ஆனால் பாஸ்கர் தங்கையாக கருத வேண்டிய மைதிலியை ஒருதலையாக காதலித்து வந்தான்.

மைதிலிக்கு அண்ணன் முறை என்ற வாய்ப்பை பயன்படுத்தி மைதிலி வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்தான் பாஸ்கர், அப்போது தன்னுடைய எண்ணத்தை அவன் மைதிலியிடம் பலமுறை வெளிப்படுத்தி இருக்கிறான்.

ஆனால் மைதிலி, நீ எனக்கு அண்ணன் முறை. எனவே உன்னை திருமணம் செய்து கொள்ள முடியாது என்று கூறியிருக்கிறார். ஆனால் அடைந்தால் மகாதேவி இல்லையேல் மரண தேவி என்ற நிலைக்கு சென்ற பாஸ்கர் மூன்று நாட்களுக்கு முன் வீட்டில் இருந்து வெளியில் சென்ற மைதிலியை நண்பர்கள் மூன்று பேருடன் சேர்ந்து தன்னுடைய காரில் கடத்தி சென்றான்.

காருக்குள்ளேயே பாஸ்கருடன் சண்டை போட்ட மைதிலி ஓடிக்கொண்டிருந்த காரில் இருந்து குதித்து தப்பினார். ஆனால் பாஸ்கர் தப்பி ஓட முயன்ற மைதிலி மீது காரை ஏற்றி அவரை கொலை செய்ய முயன்றான்.

இந்த நிலையில் அவருடைய கார் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டு விட்டது. அங்கிருந்து தப்பிய மைதிலி குடும்ப உறுப்பினர்கள் உதவியுடன் அனந்தபுரம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.

தங்கையை காதலித்து அவரை கடத்தி கொலை செய்ய முயன்ற பாஸ்கர் மற்றும் அவனுடைய கூட்டாளிகள் 3 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Views: - 160

0

0