இந்தியாவின் மிக நீளமான ஆற்றுப் பாலத்திற்கான டெண்டரைக் கைப்பற்றியது எல் அண்ட் டி நிறுவனம்..!

25 November 2020, 8:35 pm
larsen_toubro_updatenews360
Quick Share

லார்சன் அண்ட் டூப்ரோ (எல் அண்ட் டி) நிறுவனம் ஆற்றின் மேல் கட்டப்படும் இந்தியாவின் மிக நீளமான பாலத்திற்கான ஒப்பந்தத்தை வென்றுள்ளது. வரவிருக்கும் பாலம் 18.36 கி.மீ நீளம் கொண்டதாக இருக்கும். மேலும் இது வடகிழக்கில் இரண்டு மாநிலங்களை இணைக்கும். 

அசாம் மற்றும் மேகாலயாவை இணைக்கும் வகையில் பிரம்மபுத்திரா நதியில் இந்த பாலம் கட்டப்படும். புதிய பாலம் இரு மாநிலங்களுக்கிடையிலான தூரத்தை 250 கி.மீ. வரையில் குறைக்கும்.

இந்தியாவின் மிக நீளமான ஆற்றுப் பாலம் கட்டும் எல் அண்ட் டி : முக்கிய தகவல்கள் 

  • 20 கி.மீ. பாலம் கட்ட லார்சன் அண்ட் டூப்ரோ ரூ 3,166 கோடியில் குறைந்த விலைக்கு ஏலம் எடுத்தது.
  • இது தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்திற்கான என்எச் 127-பி’இல் துப்ரி முதல் புல்பாரி வரை பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே 4 வழிச் சாலை பாலமாக இருக்கும்.
  • இந்த பாலம் அசாம் மற்றும் மேகாலயா ஆகிய இரண்டு வடகிழக்கு மாநிலங்களை இணைக்கும். இது இந்தியாயாவின் ஒரு ஆற்றின் மீது கட்டப்படும் மிக நீளமான சாலை பாலமாக (18.36 கி.மீ) இருக்கும்.
  • இந்த திட்டத்திற்கு ஜிகா (ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம்) நிதியுதவி செய்து வருகிறது.
  • இந்த திட்டம் 2026-27’க்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • நான்கு வழிச்சாலையாக கட்டப்படும் பாலம் தேசிய நெடுஞ்சாலை 127-பி வழியாக கட்டப்படும்.