முதல்வர் அலுவலக அதிகாரிக்குத் தெரிந்து தான் நடந்தது..? கேரள தங்கக் கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் வாக்குமூலம்..!

11 November 2020, 2:56 pm
m_sivasankar_updatenews360
Quick Share

கேரள அரசுக்கு மேலும் சங்கடத்தை ஏற்படுத்தக்கூடிய வகையில், தங்கக் கடத்தல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஸ்வப்னா சுரேஷிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில், கொச்சியில் உள்ள நீதிமன்றத்தில் அமலாக்க இயக்குநரகம் ஒரு அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. 

அதில் முதலமைச்சர் பினராயி விஜயனின் முன்னாள் செயலாளர் சிவசங்கர் மற்றும் அவரது அதிகாரிகள் குழு முதலமைச்சர் அலுவலகத்தில் பரபரப்பான தங்க கடத்தல் வழக்கை முழுமையாக அறிந்திருந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமலாக்கத்துறை அறிக்கையின் படி, இராஜதந்திர சேனல் மூலம் மேற்கொள்ளப்பட்ட கடத்தல் குறித்து, கேரள முதல்வர் பினராயி விஜயனின் முன்னாள் செயலாளருக்கும் தெரியும் என்று ஸ்வப்னா சுரேஷ் கூறியுள்ளார்.

இந்நிலையில் கொச்சியில் உள்ள முதன்மை அமர்வு நீதிமன்றம் சிவசங்கரின் அமலாக்கத்துறை காவலை இன்னும் ஒரு நாள் நீட்டித்தது. அவரது ஜாமீன் விண்ணப்பத்தை நவம்பர் 12’ஆம் தேதி நீதிமன்றம் பரிசீலிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துணைத் தூதரகத்தின் முன்னாள் ஊழியர் பி.எஸ்.சரித் ஜூலை 5’ம் தேதி சுங்கத் துறையால் கைது செய்யப்பட்டதையடுத்து கேரள தங்கக் கடத்தல் வழக்கு வெளிச்சத்துக்கு வந்தது. .

பின்னர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துணைத் தூதரகத்தில் பணிபுரிந்த ஸ்வப்னா சுரேஷின் ஈடுபாட்டுடன், இந்த வழக்கு கேரள முதல்வர் அலுவலகம் வரை நீண்டது. இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு, அமலாக்கத்துறை, டிஆர்ஐ, சுங்க மற்றும் வருமான வரித்துறை விசாரித்து வருகிறது.

Views: - 19

0

0

1 thought on “முதல்வர் அலுவலக அதிகாரிக்குத் தெரிந்து தான் நடந்தது..? கேரள தங்கக் கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷ் வாக்குமூலம்..!

Comments are closed.