பயோலாஜிக்கல்-இ நிறுவனத்தின் மலிவு விலை தடுப்பூசி: 90 சதவீத திறனுடையது..!!

17 June 2021, 5:09 pm
Quick Share

புதுடெல்லி: பயோலாஜிக்கல்-இ நிறுவனத்தின் தடுப்பூசியானது மிகவும் மலிவான விலையில் 2 டோஸ்கள் 250 ரூபாய்க்கு விற்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் தற்போது மருத்துவ பரிசோதனையில் உள்ள பயாலிஜிக்கல் – இ நிறுவனத்தின் தடுப்பூசி கோவிட்டிற்கு எதிராக 90 சதவீதம் திறனுடையது எனவும், இந்த தொற்றை பரவலை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கும் என மத்திய அரசின் ஆலோசனை குழு டாக்டர் தெரிவித்துள்ளார்.

கோவிட் கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு அமைத்த பணிக்குழுவின் தலைவரான டாக்டர் என்கே அரோரா கூறியதாவது, அமெரிக்காவை சேர்ந்த நிறுவனம் கண்டுபிடித்த நோவாக்ஸ் தடுப்பூசியை இந்தியாவில் சீரம் நிறுவனம் உற்பத்தி செய்ய உள்ளது. இந்த மருந்து கோவிட்டை கட்டுப்படுத்துவதில் 90 சதவீத திறன் பெற்றது. இந்த தடுப்பூசி விலை குறைவாகவும் இருக்கும். இதே திறன் பெற்ற தடுப்பூசி ஒன்று இந்தியாவில் உருவாகி வருகிறது.


பயாலாஜிக்கல் – இ நிறுவனம் தயாரிக்கும் கோர்ப்வாக்ஸ் தடுப்பூசியானது அனைத்து வயதிற்கு ஏற்றதுடன் 90 சதவீத திறன் பெற்றது. இந்த மருந்து தற்போது 3வது கட்ட மருத்துவ பரிசோதனையில் உள்ளது. அக்டோபர் மாதத்தில் பயன்பாட்டிற்கு வரும். இவ்வாறு அவர் கூறினார். உருமாறிய கோவிட்டிற்கு எதிராகவும் இந்த தடுப்பூசி சிறப்பாக செயல்படுவதாக, பயாலாஜிக்கல் இ நிறுவனம் கூறியுள்ளது.

Views: - 212

0

0