மத்திய பிரதேசத்தில் மீண்டும் முழு ஊரடங்கா..? அமைச்சர் அறிவிப்பால் பரபரப்பு..!
20 November 2020, 4:17 pmகொரோனா வைரஸ் பாதிப்புகள் மாநிலத்தில் அதிகரித்து வருவதால் மத்தியப் பிரதேசம் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்த திட்டமிட்டுள்ளது. மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பில், கொரோனாவைக் கட்டுப்படுத்த மாநிலத்தின் சில பகுதிகளுக்கு ஊரடங்கை விதிக்க அரசு திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
மேலும் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் இன்று மாலை இது தொடர்பாக ஒரு கூட்டத்தை நடத்துவார் என்று மிஸ்ரா தெரிவித்தார்.
“முதல்வர் சிவராஜ் சிங் ஏழு மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் பிற அதிகாரிகளுடன் ஒரு கூட்டத்தை நடத்துவார். மீண்டும் ஊரடங்கை விதிக்கப்படுவது நிச்சயமாக நிகழ்ச்சி நிரலில் இருக்கும்” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
இந்தூர், போபால், குவாலியர், ஜபல்பூர் போன்ற நகரங்களிலும், ஹாட்ஸ்பாட்களாக வெளிவரக்கூடிய சில நகரங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
மத்தியபிரதேச மாநிலத்தில் இதுவரை மொத்தம் 1,88,018 கொரோனா தொற்றுகள் பதிவாகியுள்ளன. அவற்றில் 1,75,089 தொற்றுகள் மீட்கப்பட்டுள்ளன. மொத்தம் 3,129 பேர் உயிர் இழந்துள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில், மாநிலத்தில் 1,363 புதிய நோய்த்தொற்றுகள் மற்றும் 14 இறப்புகள் பதிவாகியுள்ளன. கடந்த வாரத்தில் போபால் மற்றும் இந்தூர் ஆகியவை கோவிட் ஹாட்ஸ்பாட்களாக வெளிவந்துள்ளன.
இதனால் டெல்லியைப் போல் மாநிலம் முழுவதும் மீண்டும் கொரோனா பரவாமல் தடுக்க ஊரடங்கு விதிக்கும் கட்டாயத்தில் மத்தியபிரதேச அரசு உள்ளது என்றும் இது குறித்த்து விரைவில் முறையான அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.
0
0
1 thought on “மத்திய பிரதேசத்தில் மீண்டும் முழு ஊரடங்கா..? அமைச்சர் அறிவிப்பால் பரபரப்பு..!”
Comments are closed.