மத்திய பிரதேசத்தில் கிங்மேக்கராக மாறுமா பகுஜன் சமாஜ் கட்சி..? நம்பிக்கையுடன் பகுஜன் தலைவர்..!

10 October 2020, 4:40 pm
Mayawati_Updatenews360
Quick Share

பகுஜன் சமாஜ் கட்சி இன்று மத்திய பிரதேசத்தில் உள்ள 28 சட்டமன்ற இடங்களில் குறைந்தது 10 இடங்களை வென்றெடுப்பதன் மூலம் மத்தியபிரதேச அரசியலில் கிங்மேக்கராக உருவெடுப்போம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது. அங்கு நவம்பர் மாதம் 3’ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி தற்போது மத்திய பிரதேச சட்டசபையில் இரண்டு எம்.எல்.ஏ.க்களைக் கொண்டுள்ளது. மூன்று எம்.எல்.ஏக்கள் இறப்பு மற்றும் 25 பேர் ராஜினாமா செய்த நிலையில் சட்டசபையின் மொத்த பலம் 202’ஆக குறைந்துள்ளது.

“இடைத்தேர்தல் நடைபெறும் 28 இடங்களில் குறைந்தது 10 இடங்களை நாங்கள் வெல்லப்போகிறோம். இந்த வெற்றிகளால், நாங்கள் கிங்மேக்கராக வெளிவரப் போகிறோம். அடுத்த அரசாங்கத்தை அமைப்பதில் நாங்கள் நிச்சயமாக ஒரு முக்கிய பங்கை வகிப்போம்.” என மாநில பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் ராமகாந்த் பிப்பல் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

“ஆளும் பாஜக சட்டசபையில் சொந்தமாக பெரும்பான்மையை பெற இதில் குறைந்தபட்சம் ஒன்பது இடங்களை வெல்ல வேண்டும். ஆனால் சில ஆய்வுகள் நான்கு இடங்களுக்கு மேல் வெல்ல முடியாது என்று கணித்துள்ளன.” என்று அவர் மேலும் கூறினார்.

ஆனால் தற்போது 28 இடங்கள் காலியாக உள்ளதால், பாஜக தற்போது சபையில் பெரும்பான்மையைப் பெற்றுள்ளது.

“மறுபுறம், எதிர்க்கட்சி காங்கிரஸ் பெரும்பான்மை இடத்தை அடைய அனைத்து 28 இடங்களையும் வெல்ல வேண்டும். ஆனால் அது சாத்தியமற்றது” என்று பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் கூறினார்.

இரு கட்சிகளும் தேர்தலில் வெற்றிபெற தில்லுமுல்லு வேலையில் ஈடுபடுவதாகவும், இதனால் வாக்காளர்கள் அதிருப்தி அடைந்துள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

“வாக்காளர்கள் பகுஜன் சமாஜ் கட்சியை காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு மாற்றாகப் பார்க்கிறார்கள். எங்களுக்கு ஏற்கனவே இரண்டு எம்.எல்.ஏ.க்கள் சபையில் உள்ளனர்” என்று பிப்பல் மேலும் கூறினார்.

Views: - 51

0

0