மகாராஷ்டிராவில் ஐந்து மாடி கட்டிடம் இடிந்து 2 பேர் பலி..! மீட்பு நடவடிக்கைகள் தீவிரம்..!

25 August 2020, 11:03 am
Five_Floor_Apartment_Updatenews360
Quick Share

மகாராஷ்டிராவின் ராய்காட் மாவட்டத்தில் நேற்று மாலை ஐந்து மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்ததில் குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இடிந்து விழுந்த கட்டமைப்பின் இடிபாடுகளில் மேலும் 19 பேர் சிக்கியிருப்பதாக அஞ்சப்படுகிறது. அதே நேரத்தில் 7 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இடிந்து விழுந்த கட்டிடத்தின் கீழ் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் இன்னும் தொடர்கின்றன.

சுமார் 10 ஆண்டுகள் பழமையான தாரெக் கார்டன் கட்டிடம், இரவு 7 மணியளவில் மகாத் தாலுக்காவின் காஜல்புராவில் இடிந்து விழுந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த கட்டிடத்தில் சுமார் 40 குடியிருப்புகள் இருந்தன. மீட்கப்பட்டவர்கள் அனைவரும் மஹாத்தில் உள்ள உள்ளூர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக அந்த அதிகாரி கூறினார்.

தேசிய பேரிடர் மீட்புப் படையின் (என்.டி.ஆர்.எஃப்) குழுக்கள் மீட்பு நடவடிக்கைகளுக்காக சம்பவ இடத்தில் முகாமிட்டுள்ளன. ராய்காட் மாவட்டத்தின் காஜல்பூரா பகுதியில் ஒரு கட்டிடம் இடிந்து விழுந்த இடத்தில் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை தொடர்கிறது

முதல்வர் உத்தவ் தாக்கரே மாவட்ட அதிகாரிகளிடம் பேசி, மீட்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு கேட்டுக் கொண்டார். கட்டிடம் இடிந்து விழத் தொடங்கியதும், கட்டிடத்தில் இருந்த சுமார் 70 பேர் வெளியே ஓடிவந்து உயிரைக் காப்பாற்ற முடிந்தது என்று மாவட்ட ஆட்சியர் கூறினார்.

“கொரோனா வைரஸ் ஊரடங்கின் காரணமாக பல குடும்பங்கள் தங்கள் சொந்த இடங்களுக்குச் சென்றதால் கட்டிடத்தில் பெரும்பாலான குடும்பங்கள் வசிக்கவில்லை என்பதையும் நாங்கள் அறிந்தோம்.” என்று அவர் மேலும் கூறினார்.

ராய்காட் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அனில் பராஸ்கர், பொதுப்பணித்துறை துறை அதிகாரிகளும் உள்ளூர் மக்களும் மீட்பு நடவடிக்கைக்கு உதவுகிறார்கள்.

Views: - 31

0

0