70,000 ரூபாய்க்கு விற்கப்பட்ட இரண்டரை வயது சிறுவன்..! கடத்தல்காரர்களை கைது செய்தது காவல்துறை..!
26 September 2020, 2:02 pmமகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில், இரண்டரை வயது சிறுவனைக் கடத்தி, குழந்தை இல்லாத தம்பதியினருக்கு ரூ 70,000’க்கு விற்றதாக மூன்று பெண்கள் உட்பட ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளதாக அதிகாரி ஒருவர் இன்று தெரிவித்தார்.
இரண்டரை வயது சிறுவன் அம்பர்நாத் டவுன்ஷிப்பில் சர்க்கஸ் மைதானத்திற்கு அருகில் அமைந்துள்ள தனது வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த சமயத்தில் செப்டம்பர் 15’ஆம் தேதி காணாமல் போயுள்ளார். அவரது பெற்றோர் அந்த பகுதியில் முழுவதும் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் அவர்கள் காவல்துறையை அணுகினர்.
காணாமல் போன குழந்தையின் படங்களை அம்பர்நாத் நகரில் ஆட்டோரிக்ஷாக்களில் போலீசார் ஒட்டினர். விரைவில், மாவட்டத்தின் உல்ஹாஸ்நகர் நகரத்தின் பாரத் நகர் பகுதியில் குழந்தை காணப்பட்டதாக ஒரு ரிக்ஷா டிரைவரிடமிருந்து போலீசாருக்கு ஒரு தகவல் கிடைத்தது.
ஒரு தம்பதியினர் குழந்தையை போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர் செப்டம்பர் 19 அன்று தனது பெற்றோருடன் மீண்டும் குழந்தை இணைந்தது என்று காவல்துறை அதிகாரி துமல் கூறினார்.
“விசாரணையின் போது, தம்பதியினர் செப்டம்பர் 15 அன்று கடத்தப்பட்ட பின்னர், ஜைனத்பி ஃபாகிர் முகமது கான் என்ற பெண்ணால் குழந்தையை ரூ 70,000’க்கு வாங்கியதாக போலீசாரிடம் தெரிவித்தனர்.” என்று அவர் மேலும் கூறினார்.
ஜைனத்பியிடம் மேற்கொண்ட விசாரணையின் போது, உண்மையை ஒப்புக்கொண்டதோடு குற்றத்திற்கு உடந்தையாக இருந்த பூஜா மகேஷ் செட்டியார், ஷெரு சுக்ரம் சரோஜ், முகேஷ் அனில் கார்வா மற்றும் மாயா சுக்தேவ் காலே ஆகியோர் குறித்ததா தகவலை வெளியிட்டதை அடுத்து அவர்களும் நேற்று கைது செய்யப்பட்டனர்.