அத்தியாவசிய சேவைகளுக்கு தினமும் நான்கு மணி நேரம் மட்டுமே அனுமதி..! மகாராஷ்டிராவில் இறுகும் கட்டுப்பாடுகள்..!

20 April 2021, 6:52 pm
grocery_shop_updatenews360
Quick Share

கொரோனா வைரஸின் பரவல் சங்கிலியை உடைப்பதற்காக மே 1 வரை தினசரி நான்கு மணிநேரங்களுக்கு மட்டுமே அனைத்து அத்தியாவசிய உணவு பொருட்களையும் வாங்க அனுமதிக்கப்படுவதாக மகாராஷ்டிரா அரசு இன்று அறிவித்தது. புதிய கட்டுப்பாடு இன்று (ஏப்ரல் 20) இரவு 8 மணி முதல் நடைமுறைக்கு வந்து மே 1’ஆம் தேதி காலை 7 மணி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை மகாராஷ்டிர பேரிடர் மேலாண்மை மற்றும் நிவாரண மற்றும் மறுவாழ்வுத் துறை வெளியிட்டுள்ளது.

 “அனைத்து மளிகை, காய்கறி கடைகள், பழ விற்பனையாளர்கள், பால் பண்ணைகள், பேக்கரிகள், மிட்டாய் பொருட்கள், கோழி, மட்டன், மீன் மற்றும் முட்டை உள்ளிட்ட அனைத்து வகையான உணவுக் கடைகள், விவசாய உபகரணங்கள் மற்றும் பண்ணை விளைபொருள்கள் தொடர்பான கடைகள், செல்லப்பிராணி உணவுக் கடைகள், பொருட்கள் தொடர்பான கடைகள் இனி காலை 7 மணி முதல் காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும்.” என தனது அறிக்கையில் பேரிடர் மேலாண்மை மற்றும் நிவாரண மற்றும் மறுவாழ்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதுபோன்ற கடைகளிலிருந்து வீட்டு விநியோகத்தை காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரை அனுமதிக்கலாம். இருப்பினும் நேரங்களை உள்ளூர் அதிகாரிகள் சூழலுக்கு ஏற்ப திருத்திக் கொள்ளவும் சலுகை வழங்கப்பட்டுள்ளது.

மாநில அதிகாரிகள் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் ஒப்புதலுக்குப் பிறகுதான் கூடுதல் சேவைகள் அல்லது நிறுவனங்களை அத்தியாவசிய சேவைகள் பிரிவில் சேர்க்க முடியும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

ஒரு அதிகாரி கூறுகையில், இது திறம்பட மக்கள் தினசரி 19 மணிநேரங்களுக்கு இந்த நடவடிக்கைகளுக்கு வெளியே அனுமதிக்கப்பட மாட்டார்கள், இருப்பினும் கடந்த காலங்களைப் போலவே மருத்துவ அவசரநிலைகளுக்காக எப்போது வேண்டுமானாலும் வெளியே செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றார்.

கடந்த இரண்டு வாரங்களாக மகாராஷ்டிரா தினசரி 50,000’க்கும் மேற்பட்ட கொரோனா பாதிப்புகளை புதிதாகச் சேர்த்து வருகிறது. வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த மாநிலத்தின் `பிரேக் தி செயின் ‘திட்டத்தின் கீழ் வேறு பல கட்டுப்பாடுகள் ஏற்கனவே உள்ளன.

இந்த வாரம், மும்பை போலீஸ் கமிஷனர் ஹேமந்த் நாக்ரலே குறிப்பிட்ட அத்தியாவசிய சேவைகளுக்காக வண்ண குறியீட்டு ஸ்டிக்கர்களை அறிமுகப்படுத்தினார். இது எந்தவொரு சரியான காரணமும் இல்லாமல் மக்கள் வெளியேறுவதை மிகவும் கடினமாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Views: - 85

0

0