மகாராஷ்டிரா அமைச்சர் பாட்டீலுக்கு கொரோனா…! தொடர்பில் உள்ளவர்கள் தனிமையில் இருக்க அட்வைஸ்

15 August 2020, 7:08 pm
Quick Share

மும்பை: மகாராஷ்டிராவில் அமைச்சர் பாலசாஹேப் பாட்டீல் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளார்.

நாடு முழுவதிலும் கொரோனா தாக்கம் உச்சத்தில் உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை மிக அதிகம். அதிக தொற்றுகளுடன் இந்த மாநிலம் முதலிடத்தில் இருக்கிறது.

இம்மாநிலத்தில் மக்களை தவிர, அமைச்சர்கள், மருத்துவர்கள் என அனைத்து தரப்பினரையும் கொரோனா தாக்கி வருகிறது. இந் நிலையில், மகாராஷ்டிரா மாநில அமைச்சர் பாலசாஹேப் பாட்டீல் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளார்.

உடல்நலம் பாதிக்கப்பட்டதால் அவர் கொரோனா சோதனை மேற்கொண்டார். அதன் முடிவில் கொரோனா இருப்பது உறுதியாகி உள்ளது.

தற்போது கராட்டில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார். அவருக்கு கொரோனா பாசிடிவ் என்பதால் கராட்டில் உள்ள கிருஷ்ணா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று அவரது அலுவலகம் கூறி உள்ளது.

அவரது மகன் கூறுகையில், சரியாக சிகிச்சை தரப்படுகிறது. உடல்நிலை பற்றி கவலைப்பட வேண்டியது இல்லை என்றார். தன்னுடன் தொடர்பு கொண்டவர்கள் பரிசோதித்து தங்களை தனிமைப்படுத்தி இருக்க வேண்டும் என்று அவரது அமைச்சர் அலுவலகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Views: - 48

0

0