மகாராஷ்டிராவையே மலைக்க வைக்கும் கொரோனா…! 5 லட்சத்தை எட்டும் பாதிப்பு…!

8 August 2020, 9:52 pm
Corona Test - Upatenews360
Quick Share

மும்பை: மகாராஷ்டிராவில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை 4 லட்சத்து 79 ஆயிரத்தை கடந்துள்ளது.

இந்தியாவிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில் தான் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை மிக, மிக அதிகம்.  இந்த மாநிலத்தில் நாள்தோறும் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

நாள்தோறும் 10 ஆயிரத்தை தாண்டி கொரோனா பாதிப்புகள் பதிவாகி வருகின்றன. இந்நிலையில் இன்று இதுவரை இல்லாத வகையில் 12,822 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி இருக்கிறது.

இதன் மூலம் தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,03,084 ஆக உயர்ந்து அதிர்ச்சியை தந்துள்ளது. ஒரே நாளில் 275 பேர் உயிரிழந்துள்ளனர். ஆக மொத்தம் பலியானவர்களின் எண்ணிக்கை 17,367 ஆக பதிவாகி இருக்கிறது.

இன்று ஒரே நாளில் 11,081 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 3,38,262 ஆக அதிகரித்துள்ளது. இன்னமும் மருத்துவமனைகளில் 1,47,048 பேர் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளனர்.

ஆசியாவின் மிக பெரிய குடிசை பகுதியான தாராவியில் இன்று புதிதாக 8 பேருக்கு கொரோனா பாதித்துள்ளது. இதன் மூலம் ஒட்டு மொத்த பாதிப்பு  எண்ணிக்கை 2612 ஆக உயர்ந்துள்ளது. தாராவியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் இன்னமும் 83 பேர் சிகிச்சையில் உள்ளனர்.