மகாராஷ்டிராவை சேர்ந்த விவசாயி ஒருவரின் வங்கிக்கணக்கில் வங்கி ஊழியர்களின் தவறுதலால் 15 லட்சம் ரூபாய் டெபாசிட் செய்யப்பட்ட சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் மாவட்டம் பைதான் தாலுகாவில் வசிப்பவர் ஞானேஸ்வர் ஓட். இவர், அப்பகுதியில் உள்ள பாங்க் ஆப் பரோடா வங்கி கிளையில் ஜன்தன் கணக்கு வைத்திருந்தார். கடந்த ஆண்டு ஆக 21ல் விவசாயியின் வங்கிக்கணக்கில் ரூ.15 லட்சம் பணம் டெபாசிட் ஆனது. இதனையறிந்த ஞானேஸ்வர், பிரதமர் தேர்தலின் போது வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டதாக எண்ணினார். பணம் டெபாசிட் செய்ததற்கு நன்றி தெரிவித்து பிரதமருக்கு கடிதம் எழுதியதுடன் தனது வங்கிக்கணக்கில் இருந்து ரூ.9 லட்சம் பணத்தை எடுத்து புதிதாக வீடு கட்டினார்.
ஆனால் உண்மையில், அந்த பணம் பிம்பல்வாடி கிராம பஞ்சாயத்தில் வளர்ச்சி பணிகளுக்கு ஒதுக்கப்பட்டது. தவறுதலாக ஞானேஸ்வர் வங்கிக்கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டது. 4 மாதங்களாக பணம் வராததை அறிந்த பஞ்சாயத்து நிர்வாகத்தினர் வங்கியில் விசாரணை நடத்திய போது நடந்த தவறு தெரியவந்தது. இது குறித்து வங்கி அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. தங்கள் மீது உள்ள தவறை உணர்ந்து கொண்ட அதிகாரிகள், பணத்தை திருப்பி கொடுக்கும்படி ஞானேஸ்வருக்கு நோட்டீஸ் அனுப்பினர்.வங்கிக்கணக்கில் எஞ்சியிருந்த ரூ.6 லட்சத்தை வங்கி எடுத்து கொண்டது. வீடு கட்டுவதற்கு செலவிட்ட ரூ. 9 லட்சத்தை எப்படி திருப்பி கட்டுவது என ஞானேஸ்வரும், அவரிடம் இருந்து பணத்தை எப்படி திருப்பி வாங்குவது என அதிகாரிகளும் குழப்பத்தில் உள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் பகல்காம் பகுதியில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடததிய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கடந்த ஏப்ரல் 22ல்…
கோவை வடகோவை - பீளமேடு ரயில் நிலையங்கள் இடையே உள்ள ஆவாரம்பாளையம் ரயில்வே மேம்பாலத்திற்கு கீழே உள்ள தண்டவாளத்தில் கற்களை…
பிரஜீன் சன் மியூசிக்கில் தொகுப்பாளராக தனது கெரியரை தொடங்கியவர் பிரஜின். அதன் பின் இவர் பல தொலைக்காட்சி தொடர்களில் நடித்திருந்தாலும்…
ஐஸ்வர்யா ரகுபதி தமிழில் மிகவும் பிரபலமான தொகுப்பாளினிகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் ஐஸ்வர்யா ரகுபதி. இவர் தொகுப்பாளினி மட்டுமல்லாது நடிகையும்…
பாகிஸ்தானுக்கு ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி பதிலடி கொடுத்துள்ளது. இதற்கு உலகமே இந்தியாவை பாராட்டி…
விஜய்க்கு ஒன்னும் தெரியாது தவெக தலைவராக பரிணமித்திருக்கும் விஜய் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளவுள்ளார். தனது…
This website uses cookies.