கங்கனா ரனவத் விவகாரத்தை கையாண்ட விதம் தவறு..! உத்தவ் அரசுக்கு டோஸ் விட்ட மகாராஷ்டிர ஆளுநர்..!
10 September 2020, 10:28 amமகாராஷ்டிரா ஆளுநர் பகத் சிங் கோஷ்யரி நேற்று முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவின் முதன்மை ஆலோசகரை கங்கனா ரனவத் விவகாரத்தை திறமையாக கையாள்வது தொடர்பாக பேச வரவழைத்தார். கங்கனா ரனவத்தின் பாந்த்ரா பங்களாவில் சிவசேனா ஆளும் மும்பை மாநகராட்சி (பி.எம்.சி) சட்டவிரோத மாற்றங்களைச் செய்ததாகக் கூறி இடித்ததை அடுத்து வரவழைத்து விசாரித்துள்ளார்.
சுஷாந்த் சிங் விவகாரம் குறித்து கருத்து தெரிவித்ததிலிருந்தே, மராட்டிய ஆளும் வர்க்கம் கங்கனா மீது அதிருப்தியில் இருந்தது. மும்பையை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருடன் ஒப்பிட்டபோது இது உச்சம் பெற்றது.
இதையடுத்து பாந்த்ராவில் உள்ள கங்கனா ரனவத் அலுவலகத்தில் அத்துமீறி சோதனை செய்த மும்பை மாநகராட்சி அதிகாரிகள், கங்கானாவின் அலுவலகத்தின் பல பகுதிகளை இடித்த்துத் தரைமட்டமாக்கினர்.
இந்நிலையில் கோஷியரி மற்றும் மேத்தா சந்திப்பு சுமார் 20 நிமிடங்கள் நீடித்தது. அங்கு முழு விஷயமும் விவாதிக்கப்பட்டது. விவகாரம் குறித்து ஆளுநர் கோஷ்யரி அறிக்கை கோரியுள்ளார்.
“இருவருக்கும் இடையிலான சந்திப்பில் ரனவத் விவகாரத்தை கையாண்டது குறித்து ஆளுநர் அதிருப்தி தெரிவித்தார். கங்கனா மாநில அரசுக்கு எதிராக அறிக்கைகளை வெளியிட்ட ஒரு நாள் கழித்து அவரது அலுவலகம் இடிக்கப்பட்டது. கோஷ்யரியின் உணர்வுகளை தாக்கரேவுக்கு தெரிவிக்க மேத்தா கேட்டுக் கொள்ளப்பட்டார்” என்று ஒரு மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
0
0