மீண்டும் ஜெட் வேகத்தில் உயரும் கொரோனா..! ஒரு வாரம் முழு ஊரடங்கை அறிவித்தது மகாராஷ்டிரா அரசு..!

21 February 2021, 6:40 pm
Corona_test_updatenews360
Quick Share

மகாராஷ்டிராவில் மீண்டும் கொரோனா வைரஸ் வேகமாக உயர்ந்து வரும் நிலையில், அமராவதி மாவட்டத்தில் மொத்தமாக ஒரு வாரம் முழு ஊரடங்கை விதிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.

முன்னதாக, சனிக்கிழமை இரவு 8 மணி முதல் திங்கள் காலை 7 மணி வரை அமராவதியில் வார இறுதி ஊரடங்கை மாவட்ட நிர்வாகம் அறிவித்திருந்தது. இருப்பினும், இப்போது அது நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் கொரோனா வைரஸ் உச்சம் பெறத் தொடங்கியதிலிருந்து, அதிக பாதிப்புக்குள்ளான மாநிலங்களில் ஒன்றாக மகாராஷ்டிரா உள்ளது. பின்னர் நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று படிப்படியாக குறைந்து வந்ததைப் போல் மகாராஷ்டிராவிலும் குறைந்தே வந்தது. 

இதையடுத்து நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் கிட்டத்தட்ட இயல்புநிலை திரும்பிய நிலையில், தற்போது மகாராஷ்டிரா மற்றும் கேரளாவில் கொரோனா எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக மகாராஷ்டிராவில் தினமும் 6,000 பாதிப்புகளைக் கடக்க ஆரம்பித்துள்ளது.

இதனால் மாநிலத்தின் பல பகுதிகளிலும் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. எனினும் கொரோனா தொற்றுக்களின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை. 

இந்நிலையில் மாநில அமைச்சகர் யஷோமதி தாக்கூர், அச்சல்பூர் நகரத்தைத் தவிர்த்து, முழு அமராவதி மாவட்டத்திலும் ஒரு வாரம் முழு ஊரடங்கு நடைமுறையில் இருக்கும் என்றார். இதற்கிடையில், இந்த காலகட்டத்தில் அத்தியாவசிய சேவைகள் மட்டுமே அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக நேற்று, மகாராஷ்டிராவில் தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக 6,000’க்கும் மேற்பட்ட புதிய கொரோனா வைரஸ் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. 6,281 புதிய பாதிப்புகளில், 1,700 அல்லது 27 சதவீதத்திற்கும் அதிகமானவை மும்பை மற்றும் அமராவதி மாநகராட்சி பகுதிகளில் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது

Views: - 7

0

0