எந்த தேர்வும் கிடையாது..! 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் ஆல் பாஸ்..! கொரோனா அதிகரிப்பால் மகாராஷ்டிரா முடிவு..!

7 April 2021, 9:35 pm
Students_UpdateNews360
Quick Share

கொரோனா வைரஸ் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், மாநில பள்ளிக் கல்வி வாரியத்தின் கீழ் 9 ஆம் வகுப்பு மற்றும் 11 ஆம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவர்களையும் எந்தவொரு பரீட்சையும் நடத்தாமல் அடுத்த வகுப்புக்கு உயர்த்த முடிவு செய்துள்ளதாக மகாராஷ்டிரா அரசு இன்று தெரிவித்துள்ளது.

“தற்போதைய கொரோனா நிலைமையை அடுத்து, 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவ மாணவிகள் அனைவரும் எந்தவொரு பரீட்சையும் இல்லாமல் அடுத்த வகுப்பிற்கு உயர்த்தப்படுவார்கள்” என்று மகாராஷ்டிரா கல்வி அமைச்சர் வர்ஷா கெய்க்வாட் இன்று அறிவித்தார்.

முன்னதாக, 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மகாராஷ்டிரா வாரிய மாணவர்கள் தேர்வுகள் இல்லாமல் அடுத்த வகுப்புக்கு உயர்வு பெறுவார்கள் என்று கெய்க்வாட் அறிவித்திருந்தார்.

கொரோனா வைரஸ் தொற்றுநோயால் ஏற்பட்ட நிலைமை மகாராஷ்டிராவில் கடுமையாக மாறி வருகிறது. நேற்று மகாராஷ்டிராவில் 55,469 புதிய கொரோனா வைரஸ் தொற்றுகள் பதிவாகியுள்ளன. 

இதன் மூலம் மாநிலத்தில் தொற்றுநோய்களின் மொத்த எண்ணிக்கை 31,13,354 ஆகவும், 297 இறப்புகள் மூலம் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 56,330 ஆகவும் அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் இப்போது 4,72,283 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதற்கிடையில், மும்பையில் 10,040 புதிய பாதிப்புகளும் 32 இறப்புகளும் பதிவாகியுள்ளன.

Views: - 0

0

0

Leave a Reply