15 வருடங்களில் 15 முறை டிரான்ஸ்பெர்..! மகாராஷ்டிராவின் “சகாயம்” துக்காராம் முந்தே..!

27 August 2020, 12:29 pm
Tukaram_Mundhe_UpdateNews360
Quick Share

தன்னுடைய நேர்மையான நடவடிக்கைகளுக்காக பெயர் பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி துக்காராம் முந்தே, தற்போது நாக்பூரிலிருந்து மும்பைக்கு மாற்றப்பட்டுள்ளார். 8 மாதங்களுக்கு முன்பு முந்தே நாக்பூர் கார்ப்பரேஷனின் பொறுப்பை ஏற்றுக்கொண்டார். இப்போது மும்பை நகரில் மகாராஷ்டிரா ஜீவன் பிரதிகாரனின் உறுப்பினர் செயலாளராக முந்தேவுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

2005 பேட்ச் ஐ.ஏ.எஸ் அதிகாரி துக்காராம் முந்தே, தனது வாழ்க்கையில் 15 வது முறையாக மாற்றப்பட்டார். இவரின் நேர்மையான செயல்பாடுகளால் அதிருப்தியில் உள்ள மகாவிகாஸ் அகாதி கூட்டணியின் அமைச்சர்கள் உட்பட பல்வேறு தரப்பினரின் அழுத்தங்களால், உத்தவ் தாக்கரே அரசு முந்தேவை இடம் மாற்றியது. சில நாட்களுக்கு முன்பு தான் முந்தே ட்விட்டரில், தனக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் தனிமையில் இருப்பதாக கூறினார்.

முந்தே உள்ளூர் அரசியல்வாதிகளின் எதிர்ப்பை எதிர்கொண்டதால் முந்தேவுக்கு பதிலாக ராதாகிருஷ்ணன் நாக்பூரில் பணியமர்த்தப்பட்டுள்ளார். முன்னதாக மகாவிகாஸ் அகாதியின் சொந்த தலைவர்களும் அமைச்சர்களும் துக்காராம் முந்தேவுக்கு எதிராக முதல்வர் உத்தவ் தாக்கரேவிடம் புகார் அளித்துள்ளனர். 

நேற்று மாநில அரசு துக்காராம் முந்தே தவிர்த்து இன்னும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளையும் இடமாற்றம் செய்தது. தற்போது நாக்பூருக்கு மாற்றப்பட்ட ராதாகிருஷ்ணன் பதவி வகித்து வந்த நாசிக் நகராட்சி ஆணையர் பொறுப்பு தற்போது கைசஸ் ஜாதவுக்கு வழங்கப்பட்டுள்ளது.

சேகர் சானேவுக்கு பதிலாக அவினாஷ் தக்னேவுக்கு போக்குவரத்து ஆணையர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. சானே தற்போது மகாராஷ்டிரா மாநில சாலைப் போக்குவரத்துக் கழகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சிட்கோவின் தலைவராக இருந்த லோகேஷ் சந்திராவுக்கு நீர்ப்பாசனத் துறை பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. எம்.ராமசாமி தேசிய சுகாதார பணிக்கு மாற்றப்பட்டார். சுஜாதா சௌனிக் பொது நிர்வாகத் துறையின் பொறுப்பையும், மூத்த அதிகாரியான எஸ்.ஜே. குண்டேவுக்கு கூடுதல் தலைமைச் செயலாளராக உள்துறை துறையின் பொறுப்பும் வழங்கப்பட்டுள்ளது.

Views: - 28

0

0