பள்ளி வளாகத்தில் இருந்த பட்டுப்போன மரம்! பென்சிலாக செதுக்கி ஆச்சரியம்!!

1 April 2021, 7:54 am
Quick Share

மஹாராஷ்டிராவில் பள்ளி ஒன்றின் வளாகத்தில் இருந்த பட்டுப்போன மரம் ஒன்றை, பென்சில் வடிவில் செதுக்கி வைக்கப்பட்டிருக்கிறது. இது அப்பகுதி மக்களையும், நெட்டிசன்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

மஹாராஷ்டிர மாநிலம் சதாரா மாவட்டத்தில் உள்ள, வாய் நகரில், டிராவிட் உயர் நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. பள்ளி வளாகத்தில் மரங்களும் வளர்க்கப்பட்டு வந்தன. இந்நிலையில், பள்ளி கட்டடத்துக்கு முன்பு இருந்த, சில்வர் ஓக் என்ற, மிகவும் பெரிய மலை சவுக்கு மரம் ஒன்று இருந்தது. இந்த மரம், சில ஆண்டுகளுக்கு முன் பட்டுப்போய் விட்டது.

ஆபத்தான நிலையில் நின்றிருந்த இந்த மரம், எப்போது வேண்டுமானாலும், பள்ளி கட்டடத்தின் மீது விழும் என்ற அபாயம் இருந்தது. இதனையடுத்து அந்த மரத்தை வேரோடு அகற்ற பள்ளி நிர்வாகம் முடிவு செய்திருந்தது. அப்போது பள்ளி முதல்வருக்கு திடீரென புதிய யோசனை ஒன்று உதித்திருக்கிறது. பட்டுப்போன கிளைகளை அகற்றி விட்டு, மரத்தை செதுக்கி மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி என்ற திட்டத்தின் முத்திரையான பென்சிலாக மாற்றலாம் அதனை மாற்றலாம் என யோசித்திருக்கிறார்.

தனது இந்த யோசனையை தச்சர் ஒருவரிடம் தெரிவிக்க, அவரும் இதற்கு ஓகே சொல்லி உள்ளார். இதனையடுத்து, தச்சரின் கைவண்ணத்தில், 6 அடி உயர பிரமாண்ட பென்சிலாக அந்த மரம் உருமாறி உள்ளது. இந்த மரத்தை உருவாக்க 6 நாட்கள் செலவு செய்திருக்கிறார் தச்சர். தற்போது இந்த பிரமாண்ட பென்சில் பள்ளி மாணவர்கள் மற்றும் அப்பகுதி மக்களை கவர்ந்ததுடன், நெட்டிசன்களையும் கவர்ந்து பாராட்டுக்களை பெற்று வருகிறது.

Views: - 0

0

0

Leave a Reply