மகாராஷ்டிராவில் தீவிரமடையும் கொரோனா: காங்கிரஸ் எம்.எல்.ஏ. தொற்று பாதிப்பால் உயிரிழப்பு..!!

10 April 2021, 4:08 pm
maharastra mla - updatenews360
Quick Share

மகாராஷ்டிராவின் டெக்லூர் தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ரவுசாஹேப் அந்தபுர்கர், கொரோனா வைரஸ் பாதிப்பால் மரணமடைந்தார்.

நாட்டிலேயே மகாராஷ்டிரா மாநிலத்தில்தான் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் அம்மாநிலத்தின் நாந்தேடு மாவட்டத்தில் உள்ள டெக்லூர் தொகுதியின் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரான ரவுசாஹேப் அந்தபுர்கருக்கு சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து அவரது தொகுதியில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் அவரது உடல்நிலை மோசமடைந்ததால் மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா நோய்த்தொற்றுக்கு உயிரிழந்த இரண்டாவது எம்.எல்.ஏ. ரவுசாஹேப் அந்தபுர்கர் ஆவார். முன்னதாக, பண்டார்பூரைச் சேர்ந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ., பாரத் பால்கே, கடந்த ஆண்டு நவம்பர் 28ம் தேதி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 34

0

0